தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் சட்டம் - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்!

yesterday
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் சட்டம் - சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்!

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 100% வரை வரி விதிப்பதற்கான அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கும் புதிய சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கும் புதிய அமெரிக்கத் தடைகள் சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ(எம்)) அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, எந்த நாடு யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை தனதாக்கிக்கொள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது. பிற நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் வகையிலான இந்தச் சட்டம், அந்த நாடுகளின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறுவதாகும்; இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ள இந்தியாவும், ரஷ்யாவிடமிருந்து கணிசமான அளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் 51 சதவீதத்துக்கும் அதிகமானவை ரஷ்யாவிலிருந்தே வந்தன.

எண்ணெய் விநியோகத்தை கட்டாயமாகத் தடுத்து நிறுத்துவதோ அல்லது அதிக செலவில் மாற்று விநியோக முறைக்கு மாறச் செய்வதோ எரிபொருள் விலையை உயர்த்தும். இதன் விளைவாக பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, பொருளாதாரத்திலும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியும் தடைபட்டுள்ளது.

அமெரிக்காவை கூட்டாளியாகக் கருதுவதையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிரட்டும் நடவடிக்கைகளுக்குப் பணிந்து போவதையும் மோடி அரசு கைவிட வேண்டும். ஜி-20 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ள ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தனது அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவின் நிலைப்பாட்டை வலுவாக எடுத்துரைத்து, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். நமது பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைத் முடிவுகளை அமெரிக்கா தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.