தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் இளைஞர் சூர்யா சவுகான் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

3 Jun 2026, 8:43 pm
தில்லியில் இளைஞர் சூர்யா சவுகான் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

தில்லியில் இளைஞர் சூர்யா சவுகான் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

புதுதில்லி தலைநகர் தில்லியில் கோடா குடியிருப்பைச் சேர்ந்த இளைஞரான சவுகான் என்பவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கும், ஆட்சியாளர்கள் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருப்பதற்கும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தில்லி மாநிலக்குழு செயலா ளர் அனுராக் சாக்சேனா ஓர் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கோடா குடியிருப்பைச் சேர்ந்த இளைஞ ரான சூர்யா சவுகான் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்டமை குறித்து கட்சி தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது துயருற்ற குடும்பத்தினருக்குத் தனது மன மார்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.

கட்சியின் காஜியாபாத் மாவட்டக் குழுவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதிக் குழு, சூர்யா சவுகானின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்தது.

இக்குழுவில் தோழர்கள் பிரிஜேஷ் சிங், ஈஸ்வர் தியாகி, நீரு செங்கர், தேவேந்திர சர்மா, திர்பூல் சிங் மற்றும் பிற தோழர்கள் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் அப்பகுதி மக்களு டன் கலந்துரையாடி, அங்கு நிலவும் சூழல் குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.

சூர்யாவின் குடும்பம் மிகவும் எளிய பொருளா தாரப் பின்னணியைக் கொண்டது என்பதை அப்பிரதிநிதிக் குழு கண்டறிந்தது.

சூர்யா சவுகா னின் தந்தை சுமார் ஓராண்டுக்கு முன்பு காலமா னார். அவரது குடும்பத்தில் தாய், ஒரு சகோதரன் மற்றும் திருமணமான ஒரு சகோதரி ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் பல ஆண்டுகளாக கோடா குடியிருப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்; சூர்யாவின் தாயார் மேற்கொள்ளும் கடும் உழைப்பின் மூலமே இக்குடும்பம் பெரும்பாலும் பிழைப்பு நடத்தி வருகிறது.

இந்தத் துயரச் சம்பவம் அக்குடும்பத்தையே நிலைகுலை யச் செய்துள்ளது. சூர்யாவின் தாயார் ஆழ்ந்த துய ரத்திலும் மனவேதனையிலும் ஆழ்ந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் நியாயமான, வெளிப்படையான மற்றும் சட்டப்பூர்வமான முறை யில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

என்கவுண்டர், புல்டோசர் அரசியல் எனினும், இந்தத் துயரச் சம்பவத்தைப் பயன் படுத்தி வகுப்புவாத பதற்றத்தையும் மதவெறித் தீயை விசிறிவிடும் நடவடிக்கைகளும் மிகவும் ஆபத்தானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் காவல்துறையினரால் ‘என்கவுண்டர்’ செய்யப்பட்டதாகக் கூறப்படுவதன் மீதும், அவரது குடும்ப உறுப்பினர்களின் வீடு களை இடிப்பதற்கான அறிவிப்புகள் வெளி யிடப்பட்டதன் மீதும் கட்சி தனது ஆழ்ந்த கவலை யைத் தெரிவிக்கிறது.

சட்டத்தின் ஆட்சியைப் புறக் கணித்துவிட்டு, ‘என்கவுண்டர்’ மற்றும் ‘புல்டோசர்’ அரசியலை முன்னிறுத்துவது நீதி அமைப்பை பலவீனப்படுத்துவதோடு, பழிவாங்கும் மனப்பான் மையையும் சமூகப் பிளவையும் வளர்க்கிறது.

இந்தத் துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டவும், பல்வேறு சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கவும் சில வகுப்புவாத அமைப்புகளும் அரசியல் சக்திகளும் மேற்கொள்ளும் முயற்சி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உன்னிப்பா கக் கவனித்து வருகிறது.

சூழலைச் சூடாக்கவும், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவும் ஆர் எஸ்எஸ், பஜ்ரங் தளம் மற்றும் பிற மதவெறி சக்தி கள் மேற்கொள்ளும் முயற்சிகளை கட்சி வன்மை யாகக் கண்டிக்கிறது.

மதவெறித் தூண்டுதல், வெறுப்புப் பிரச்சாரங்கள்...

நிர்வாகம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அனைத்து வகையான மதவெ றித் தூண்டுதல்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் வதந்தி பரப்புதல்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்துகிறது.

அனைத்து குடிமக்களும் அமைதி, நிதானம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றும், எந்தவொரு வதந்திக்கும் அல்லது மதவெறிப் பிரச்சாரத்திற்கும் துணை போகக் கூடாது என்றும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

துயரத்தில் ஆழ்ந்துள்ள ஒரு குடும் பத்தின் துயரத்தையும், ஒரு இளைஞரின் கொலை யையும் அரசியல் அல்லது மதவெறி ஆதாயங்களுக் காகப் பயன்படுத்த மேற்கொள்ளப்படும் எந்த வொரு முயற்சியும் சமூகத்தால் உறுதியாக நிராக ரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அனுராக் சாக்சேனா அறிக்கையில் கூறியுள்ளார். ந.நி.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.