ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
17 Jul 2026, 9:20 pm
<p><strong>ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</strong></p><p>சென்னை, ஜூலை 17 - ஊடகவியலாளர் விஜயன் மீதான காவல்துறை அத்துமீறலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்ப தாவது: தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சி யின் நெறியாளரும், மூத்த பத்திரிகையாளரு மான விஜயனை திருவல்லிக்கேணி போலீ சார் விசாரணை என்ற பெயரில் அலைக்கழித் துள்ளதும், அவரது செல்போனை பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளதையும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக் கிறது. மனித உரிமையை மீறிய செயல் விசாரணைக்கு போலீசார் அழைப்பது என்பது சட்டரீதியான நடவடிக்கையே. ஆனால், விசாரணையைத் தாண்டி கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் நோக்கில் நள்ளிரவு நேரத்தில் அழைப்பதும், நீண்ட நேரம் அலைக்கழிப்பதும் சட்டத்திற்கு புறம் பான விஷயமாகும். காவல்துறையின் இத்தகைய நடவடிக் கைகள் மனித உரிமைகளை மீறிய செயலா கும். இதுபோன்று அத்துமீறிய நடவடிக்கை களை காவல்துறை உடனடியாக நிறுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.</p>
