தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீர்குலைப்பதா? சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்
7 Jul 2026, 9:37 pm

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீர்குலைப்பதா? சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

புதுதில்லி, ஜூலை 7 - தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டு ள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கண்டனத்திற்குரிய முன்மொழிவு!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தில், பயனாளிக்கான தகுதி அளவு கோலை ‘குடும்பம் சார்ந்த’ முறையிலிருந்து ‘தனிநபர்’ (நபருக்கு இத்தனை கிலோ) சார்ந்த முறையாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. தனிநபர் ஒருவருக்கு 7 கிலோ உணவு தானியம் என மாற்றியமைக்கும் இந்த முன்மொழிவு, பெரிய குடும்பங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. ஏனெனில், குடும்பத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கான ஒதுக்கீடு மாதத்திற்கு 35 கிலோ என்ற அளவிலேயே தொடர்ந்து இருக்கும். அதே வேளையில், தற்போதைய திட்டத்தின் கீழ் முழுமையாக 35 கிலோ தானி யத்தைப் பெறும் சிறிய குடும்பங்களுக்கு, இந்த மாற்றம் அவர்களின் உணவு தானிய ஒதுக்கீட்டை கணிசமாகக் குறைத்துவிடும்.

விளிம்பு நிலை மக்களுக்குப் பாதிப்பு!

எனவே, இத்திருத்தம் சமூகத்தின் மிக ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை, அதாவது முதிய தம்பதிகள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினக் குடும்பங்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தை சார்ந்திருக்கும் சிறிய குடும்பங்கள் ஆகியோ ரைக் கடுமையாகப் பாதிக்கும்.

தென் மாநிலங்களுக்கு தண்டனையா?

இத்திருத்தம் மாநிலங்களையும், குறிப்பாகக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங் களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, அதன் விளைவாகச் சிறிய குடும்ப அளவுகளைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்களை யும் மோசமாகப் பாதிக்கும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சாதனை படைத்திருந்தாலும், இம்மாநிலங்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த உணவு தானிய ஒதுக்கீட்டில் குறிப்பிடத்தக்கக் குறைப்பைச் சந்திக்க நேரிடும்.

விரிவுபடுத்துவதற்குப் பதிலாக சுருக்குவதா?

காலாவதியான 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படை யில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும் என்ற நியாயமான மற்றும் பரவலான கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன் விளைவாக, தகுதியுள்ள லட்சக்கணக்கான மக்கள் இச்சட்டத்தின் பலன்களைப் பெற முடியாமல் விடுபட்டுள்ளனர். தற்போதைய மக்கள் தொகை புள்ளிவிவரங்களுக்கு ஏற்ப பயனாளிகளின் தரவுத்தளத்தைப் புதுப்பி த்து, திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஏழ்மை யான பிரிவினருக்கான உணவு ஒதுக்கீட்டை குறைக்கும் வகையிலான ஒரு திருத்தத்தை கொண்டுவரவே மோடி அரசு முடிவு செய்துள்ளது.

உணவு உரிமையை பறிக்கக்கூடாது!

உணவை ஒரு சட்டப்பூர்வ உரிமையாக நிலைநாட்ட மக்கள் நடத்திய தொடர்ச்சி யான போராட்டங்களின் விளைவாக இயற்றப்பட்ட ஒரு முக்கியச் சட்டமான ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை’, படிப்படி யாக நீர்த்துப்போகச் செய்யவும் பலவீனப் படுத்தவும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சியையே ஏழை - எதிர்ப்புத் தன்மை யுள்ள இந்தத் திருத்தம் வெளிப்படுத்துகிறது. எனவே, முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறி யுள்ளது. (ந.நி.)