தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறை – சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

yesterday
தில்லியில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறை – சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமா, வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவிலான மக்களை நீக்குவதற்கு வழிவகுத்த SIR நடைமுறையைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் பல்வேறு பகுதிகளில் இன்று அமைதியான முறையில் போராடியவர்கள் மீது தில்லி காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறையை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது குறித்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமா, வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவிலான மக்களை நீக்குவதற்கு வழிவகுத்த SIR நடைமுறையைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் பல்வேறு பகுதிகளில் இன்று அமைதியான முறையில் போராடியவர்கள் மீது தில்லி காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட ஒடுக்குமுறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

இணையச் சேவை முடக்கம், மெட்ரோ நிலையங்கள் மூடல், போக்குவரத்து சேவைகள் நிறுத்தம் மற்றும் பிற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் என நகரில் ஊரடங்கு போன்ற சூழல் நிலவிய போதிலும், மக்கள் போராட்டத்திற்காக வீதிகளில் இறங்கி வந்துள்ளனர்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ​​சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், மூத்த தலைவர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.வி.கோவிந்தன், விஜயராகவன் மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்களான கே.கே.சைலஜா, பி.கே.ஸ்ரீமதி, தாமஸ் ஐசக், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திரஜித் குப்தா சாலையில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் பவனிலிருந்து பேரணியாகச் செல்ல முயன்றபோது, ​​மின்டோ சாலைக்கு அருகில் பி.வி.ராகவுலு, அருண் குமார், விஜூ கிருஷ்ணன், மரியம் தவலே உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும், ஏ.ஆர்.சிந்து, லோகநாதன் உள்ளிட்ட மத்தியக் குழு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். மூத்த தலைவர் மாணிக் சர்க்காரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

இந்த போராட்டங்களால் நரேந்திர மோடி அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது. அதேவேளையில், இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களைத் தடுத்து நிறுத்தத் தவறிவிடும் என்பதும் வெளிப்படையானதே. தில்லியில் உள்ள எங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தங்கள் அதிகாரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற வெறியில், பாஜக அரசாங்கம் கடும் கோழைத்தனத்தையும், ஜனநாயக ரீதியிலான நிர்வாகத்தை நடத்துவதில் தனக்குள்ள முழுமையான இயலாமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.