பாஜக எம்.பி-யின் சாதியவாத கருத்துக்கு சிபிஎம் கண்டனம்!
20 Jun 2026, 7:35 pm

பாஜக எம்.பி ரமேஷ் ஜிகாஜினகியின் சாதியவாத கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-இன் சட்டப்பூர்வ நிலை மற்றும் நிதி ஆதாரம் குறித்துக் கேள்வி எழுப்பி கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளிக்கும் வகையில், கடந்த ஜூன் 18-ஆம் தேதி, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜிகாஜினகி, "தலித் பிரிவை சேர்ந்த ஒருவர் ஏன் ஆர்.எஸ்.எஸை பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்? ஆர்.எஸ்.எஸ் உடன் மோதிய எவரும் தப்பிக்கூட பிழைத்ததில்லை" என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த நிலையில், பாஜக எம்.பி ரமேஷ் ஜிகாஜினகியின் சாதியவாத கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மத்தியக்குழு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"ஆர்.எஸ்.எஸ்-இன் சட்டப்பூர்வ நிலை மற்றும் நிதி ஆதாரம் குறித்துக் கேள்வி எழுப்பி கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே எழுதிய கடிதம் முற்றிலும் நியாயமானது. பாஜக எம்.பி. ரமேஷ் ஜிகாஜினகி தெரிவித்த வெறுப்பு நிறைந்த சாதியவாதக் கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களின் மௌனம், அவர்களின் ஒப்புதலையே காட்டுகிறது. அந்த எம்.பி. மீது நடவடிக்கை எடுங்கள். மனுவாதம் ஒழிக! இந்துத்துவா ஒழிக!" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.