அராஜகமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திடுக
3 hours before

அராஜகமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திடுக

விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் சிபிஎம் புகார்

விழுப்புரம், ஜூலை 25- விழுப்புரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து வெள்ளிக்கிழமை நடை பெற இருந்த போராட்டத்தின் போது அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.

கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்து குமரன், ஜி.ராஜேந்திரன்,சே. ஆர்டி.முருகன், வட்ட செயலாளர் அறிவழகன்,ஆர்.கண்ணப்பன், ஒன்றிய செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சிவ ராமன், எஸ்.பிரகாஷ்,ஏ.நாகராஜன், கே.வீரமணி, விதொச எஸ்.அபி மண்ணன் ஆகியோர் சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கடந்த 24.07.2026 அன்று அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒன்றிய அரசின் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இரவு நேர காத்திருப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தோம்.

அதன் அடிப்படையில் 23.07.2026 அன்று விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் அனுமதி கோரி மனு கொடுத்திருந்தோம். 24.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் போராட்டம் நடக்க இருந்த புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விழுப்புரம் நகராட்சித் திடலில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினோம்.

அப்பொழுது அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் வந்து இருந்த விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சோம சுந்தரம் தூண்டுதலின் பேரில் தாலுகா காவல் ஆய்வாளர் ம.பிர காஷ், மேற்கு காவல் உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் ஆகியோர் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அநாகரிகமான முறை யில் தோழர்களிடம் இருந்த பேனரை பிடுங்கி கிழித்தெறிந்தனர்.

காவல் ஆய்வாளர் பிரகாஷ் ஒருமை யில்,"டேய் வண்டில ஏறுடா" என்று கூறி காலால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் வலது காலில் எட்டி உதைத்தார்.

வலுக்கட்டாயமாக சக காவலர்க ளுடன் சேர்ந்து என்னை தூக்கி காவல் வண்டியில் ஏற்றி கையாலும் காலாலும் சரமாரியாக அடித்தார். அப்பொழுது காவல் ஆய்வாளர் பிரகாஷ், "பறப்பசங்க இந்த கட்சி யில் அதிகம் இருக்கிறதாலதான் இப்படி நடந்துக்கறானுங்க.

இதனால தான் இவனுங்க கட்சிக்கு எவனும் வரமாட்டேங்கிறான்" என்று மிகக் கேவலமாகப் பேசினார். மேலும், காவல் உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் எங்களது வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அறிவழகனின் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி, "தேவிடியா பசங்களா வண்டியில் ஏறுங்கடா," என்று கூறி "நீ வக்கீல்னா பெரிய மயிரா” என்று திட்டி லத்தியால் கடுமை யாகத் தாக்கினார்.

இதில் வழக்க றிஞர் அறிவழகனின் சட்டையை கிழித்து விட்டனர். ஏ.கண்ணதாசன், எம்.முருகன் உள்ளிட்ட பலரை காவல் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் ஆகியோர் திட்டமிட்டு குறிவைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அதற்கு சாட்சியாக பல வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், "இந்த நாய்களை அடிச்சு வண்டில ஏத்துங்கடா," என்று லத்தியைக் காட்டி மிரட்டினார்.

கொடூரமாகத் தாக்கி சாதிப்பெயரை சொல்லித் திட்டி கொலை மிரட்டல் விடுத்த காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் பிரகாஷ், காவல் உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மதிவாணனிடம் கொடுத்தனர், மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தாக தெரிவித்தனர்.