தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எதேச்சதிகார, இந்துத்துவா-கார்ப்பரேட் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்! - ச.வீரமணி

30 May 2026, 9:12 pm
எதேச்சதிகார, இந்துத்துவா-கார்ப்பரேட் கொள்கைகளுக்கு எதிராக  மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்! -  ச.வீரமணி

எதேச்சதிகார, இந்துத்துவா-கார்ப்பரேட் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்! - ச.வீரமணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு பிரகடனம்

புதுதில்லி, மே 30– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் மே 22-24 தேதிகளில் புதுதில்லி யில் உள்ள ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் சமகால நிகழ்வுகள் குறித்த அறிக்கை வருமாறு:

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் ஆய்வுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல், ஸ்தாபன மற்றும் சித்தாந்தக் காரணங்கள் குறித்த துவக்க கட்ட விவாதத்தை மேற்கொண்டது. சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடை விற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளும் நோக்கில், கட்சியின் பல்வேறு நிலைகளிலி ருந்தும் கருத்துக்களைச் சேகரிக்கும் பணி யில் கேரள மாநிலக் குழு ஏற்கெனவே ஈடு பட்டுள்ளது. இக்கருத்துக்கள் அனைத்தும், 2026 ஜூன் 5 முதல் 8 வரை திருவனந்த புரத்தில் நடைபெறவுள்ள மாநிலச் செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன. இக்கூட்டங்களில் அரசியல் தலைமைக் குழுவின் உறுப்பினர்க ளைக் கொண்ட ஒரு குழு கலந்துகொள்ளும். இவ்விவாதங்களின் அடிப்படையில், கண்ட றியப்பட்ட பலவீனங்களைக் களைவதற்கான சரிப்படுத்தும் நடவடிக்கைகள், கட்சி முழுவதை யும் நம்பிக்கையில் எடுத்துக்கொண்டு முன் னெடுக்கப்படும். மேற்கு வங்கத்தில், கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கூடித் தங்கள் கருத்துகளை மாநிலக் குழுவிடம் சமர்ப்பிக்கும். மாநிலக் குழுவும் கூடி, ஜூன் இறுதிக்குள் அந்த ஆய்வை இறுதி செய்திடும். தமிழ்நாடும் அசாமும் இதேபோன்ற ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டிடும். மேற்கு வங்க சட்டமன்றத்தில் கட்சியின் மறு பிரவேசம் ஓர் ஆக்கப்பூர்வமான வளர்ச்சியாகும். புதுச்சேரியின் மாஹே தொகுதியிலிருந்து, கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்க ளித்த, மேற்கூறிய அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மத்தியக் குழு தனது நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிறது. மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுப்பதிலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதிலும், அனை த்து வகையான எதேச்சதிகார மற்றும் இந்துத் துவா-கார்ப்பரேட் தாக்குதல்களை எதிர்ப்பதிலும் கட்சி எப்போதும் முன்னணியில் நிற்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களின் பிரச்சனைகளைச் சட்டமன்றத்தில் எழுப்புவதுடன், மக்கள் விரோத மற்றும் இந்துத்துவா-கார்ப்பரேட் கொள்கைக ளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னின்று நடத்துவார்கள். தமிழ்நாட்டில் சி. ஜோசப் விஜய் தலைமை யில் புதிதாக அமைந்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ அரசு, அரசமைப்புச் சட்டம், அதன் கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக அளித்த உறுதிமொழிக்கு இணங்கவே ஆட்சி நடத்தும் என்று மத்தியக் குழு எதிர்பார்க்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், சமூகத்தில் இந்துத் துவா வகுப்புவாத சக்திகள் ஒருங்கிணைந்தி ருப்பதும், மேற்கு வங்கத்தில் அவர்கள் அதி காரத்தைக் கைப்பற்றியிருப்பதுமாகும். கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் பாஜகவால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களை மட்டுமே வெல்ல முடிந்திருந்தாலும், அங்கு அவர்களின் பரவல் ஒரு பெரும் கவலையளிக்கும் விஷய மாகும். மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணியின் வெற்றியும், அசாமில் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதும் அனைத்து மதச்சார்பற்ற, முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் ஆழ்ந்த கவலையளிக்கும் ஒரு விஷயமாகும். மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், வகுப்பு நல்லிணக்கம் உறுதி செய்யப்படுவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும். மத்தியக் குழு, 2026 ஜூலை பிற்பகுதி யில் கூடி, அனைத்து மாநிலங்களின் ஆய்வ றிக்கைகளின் அடிப்படையில், தேர்தல் முடிவு கள் குறித்து ஒரு முழுமையான மறுஆய்வை மேற்கொள்ளும். கண்டறியப்பட்ட பலவீனங்க ளைச் சரிசெய்யும் பணிகள், மேலிருந்து கீழ்வரை உடனடியாக மேற்கொள்ளப்படும்.

‘இந்தியா’ கூட்டணி மற்றும் காங்கிரசின் அணுகுமுறை

வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியை முறி யடித்திட, அனைத்து இடதுசாரி, முற்போக்கு, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை அவசியமாகிறது. ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையைக் கட்டி யெழுப்புவதற்கு, மற்ற எதிர்க்கட்சிகள் மீதான காங்கிரசின் தற்போதைய அணுகுமுறை உதவிகரமாக இல்லை. கேரள சட்டமன்றத் தேர்த லின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரசின் மூத்த தலைவர்களால் முன்வைக்கப்பட்ட, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜகவுடன் ஓர் உடன்பாடு இருந்தது’ என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை மத்தியக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மதவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராடும் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியின் ஓர் அங்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இவ்வாறு கொடிய, உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதிகள் மறுவரையறை சதி

நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதி மறுவரை யறைப் பணிகளை மேற்கொள்ளும் போர்வை யில், நாட்டின் தேர்தல் வரைபடத்தையே மாற்றி யமைக்கும் தனது அரசியல் செயல்திட்டத்தை முன்னெடுக்க, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முயன்றது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதையும், தொகுதி மறுவரையறைப் பணிகளையும் அது உள்நோக் கத்தோடு ஒன்றோடொன்று இணைத்தது. தேர்தல் ரீதியாகத் தனக்குச் சாதகமான பலன் களைப் பெற்றுத்தரும் வகையிலேயே, தொகுதி மறுவரையறைப் பணிகளை பாஜக திட்டமிட்டு வருகிறது. பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து பலவீனமாகவே இருந்துவரும் தென்மாநிலங்க ளின் செல்வாக்கை குறைப்பதையே இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தனது குறுகிய அரசியல் செயல்திட்டங்களைச் செயல்படுத்துவ தற்காக, அரசு நிறுவனங்களை பாஜக தற்போது அப்பட்டமாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முறைகேடுகள் மற்றும் மக்கள் மீதான தாக்குதல்

தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெற்ற அனைத்து மாநிலங்களிலும் ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி’ (SIR) நடைமுறையைச் செயல்படுத்தியது. ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ (logical discrepancies) எனும் ஒரு புதிய வகைப்பாட்டின் கீழ், அற்பமான மற்றும் ஆதாரமற்ற காரணங்க ளைக் காட்டி, லட்சக்கணக்கான வாக்காளர்க ளின் அரசமைப்பு ரீதியான வாக்குரிமை மறுக்கப்பட்டது. இந்தத் தேர்தல்களில் குடிமக்க ளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதில் நீதித் துறையும் தவறிவிட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் நலன்களை உறுதிசெய்யும் நோக்கில் வாக்காளர் பட்டியல்கள் இவ்வாறு சிதைக்கப் பட்டதே இல்லை. இந்த முழுச் செயல்பாடும் நமது தேர்தல் அமைப்பின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறது. தற்போது, மேலும் 17 மாநிலங்களில் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைச் செயல்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த கட்சியின் நிலைப்பாட்டை மத்தியக் குழு மீண்டும் வலி யுறுத்துகிறது – எந்தவொரு உண்மையான குடி மக்களின் வாக்குரிமையும் ஒருபோதும் மறுக்கப் படக்கூடாது. இந்த நடைமுறையின் வாயிலாக, தனக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களின் எல்லைகளை தேர்தல் ஆணையம் மீறிச் செயல்படுகிறது. கெடு வாய்ப்பாக, இந்தச் செயல்முறையின் செல்லுபடித்தன்மை குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்னும் வழங்க வில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர தூய்மைப் படுத்தும் செயல்முறையின் மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள், அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற அனு மதிக்கப்பட மாட்டார்கள் என்று பீகார் மற்றும் மேற்கு வங்கத்திலுள்ள பாஜக அரசுகள் அறிவித்துள்ளன. இந்தச் செயல்முறையின் அடிப்படையில், ஏற்கெனவே ஐந்து லட்சம் குடும்ப அட்டைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் மேல்முறையீடுகள் செய்துள்ளனர். அம்மக்க ளின் மேல்முறையீடுகள் இன்னும் நிலுவையி லேயே உள்ளன. அந்த மேல்முறையீடுகள் மீது இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, அம் மக்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இது அனைத்து ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதோடு, குறிப்பிட்ட சில பிரிவைச் சேர்ந்த மக்களின் குடியுரிமையையும் உரிமைகளையும் தரம் தாழ்த்துவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாகவும் அமைகிறது. இத்தகைய தீவிர பாகுபாட்டை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அனு மதிக்காது. மக்களைத் திரட்டி, இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திடும்.

இந்தியப் பொருளாதார நெருக்கடி

அரசின் தீவிரப் பிரச்சாரங்கள் ஒருபுறமிருக்க, இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து கடுமையான நெருக்கடியிலேயே நீடிக்கிறது; சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததன் மூலம், பிரதமர் அவர்களே இதனை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; பல்வேறு துறைகளிலும் வேலை இழப்புகள் பெருமளவில் பெருகி வருகின்றன. பல குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடும் முடக்கத்தி லும் நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கின்றன. உரங்களின் விலை உயர்வு மற்றும் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, விவசாயத் துறையும் ஒரு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு நிற்கிறது. மிக உயர்ந்த வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு விகிதங்களைக் கொண்டுள்ள இந்தியாவே, உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. பெரும் ஊதிய வேறுபாடுகள் மற்றும் சமமற்ற, ஊதிய மற்ற பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பாலின ஏற்றத்தாழ்வு விகிதங்களும் இங்கு மிக அதிகமாக உள்ளன. இந்திய ரூபாய் வர லாற்றிலேயே மிக மோசமான குறைந்தபட்ச நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அந்நியச் செலாவணி இருப்புகளும் மிக வேகமாகச் சரிந்து வருகின்றன.

போரின் தாக்கமும் எரிபொருள் விலை உயர்வும்

சர்வதேசப் போரை ஒரு சாக்காகக் கொண்டு, அரசாங்கம் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் – குறிப்பாக வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் – விலையை உயர்த்தியதுடன், அவற்றின் பயன்பாட்டின் மீதும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இவ்வனைத்து நடவடிக்கைகளும் உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையில் கடும் உயர்வை ஏற்படுத்தின. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பல சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உட னேயே, கடந்த 11 நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பல கட்டங்களாக உயர்த்தப் பட்டு, ஒரு லிட்டருக்கு 7 ரூபாய்க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வுகள் நான்கு கட்டங்களாக நிகழ்ந்தன – முறையே ஒரு லிட்டருக்கு ரூ. 3.00, 90 காசுகள், 87 காசு கள் மற்றும் ரூ. 2.61 என்ற அளவில் அவை அமைந்திருந்தன. எரிபொருள் விலையேற்ற மும், அதனுடன் இணைந்த சிக்கன நடவடிக்கை களும், ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது முறை யான உணவு கிடைப்பதை உறுதிசெய்யவே போராடிக்கொண்டிருக்கும் சாமானிய மக்கள் மீது மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளன. நமது எரிசக்தி வளங்களின் நீண்ட கால உத்தி சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் படுதோல்வி அடைந்துள்ளது. இதுவே மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பா லான இன்னல்களுக்குக் காரணமாக அமைந் துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்க ளைத் தீவிரமாகத் திரட்டி, சிக்கன நடவடிக்கை களின் பெயரால் அரசாங்கம் மக்கள் மீது திணித்துள்ள சுமைகளை எதிர்த்துப் போராடும்.

உரத் தட்டுப்பாடும் விவசாய நெருக்கடியும்

போதுமான அளவு உர இருப்பை உறுதி செய்வதில் அரசு தவறியதன் காரணமாக, விவசாயிகள் கடுமையான உரத் தட்டுப்பாட்டை யும், அதிகரித்து வரும் விலை உயர்வோடு கூடிய அவல நிலையையும் எதிர்கொண்டு நிற்கின்றனர். விவசாயப் பருவம் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதால், உரங்கள் தடையின்றி உடனடியாகக் கிடைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி முன்னின்று தலைமை தாங்கும்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் முடக்கம்

ஒன்றிய அரசு, ‘விபிஜி ராம் ஜி’ (VBGRA MG) சட்டத்தின் வரைவு விதிகளை அறிவித்துள்ள துடன், 2026 ஜூலை 1 முதல் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை’ (MGNREGA) ரத்து செய்வதாகவும் அறி வித்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வும், குறிப்பாக இணைய வசதி சீராகக் கிடைக் காத கிராமப்புறங்களில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களைச் சார்ந்திருக்கும் கட்டாய நடை முறைக்கு எதிராகவும் பல்வேறு மாநிலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் தீவிரப் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதுணையாக நின்று, வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கும். ‘விபிஜி ராம் ஜி’ சட்டத்தை முழுமை யாக ரத்து செய்துவிட்டு, அதற்கு மாற்றாக, வேலைவாய்ப்புக்கான முழு உத்தரவாதத்து டனும், உயர்த்தப்பட்ட ஊதியத்துடனும் கூடிய, வலுவான ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்’ கீழான திட்டத்தையே மீண்டும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்தியக் குழு மீண்டும் வலியுறுத்துகிறது. விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்களை எதிர்த்தும், தங்களின் உரிமைகளை நிலைநாட்டவும் போராட்டங்களை முன்னெடுக்கும் விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளுக்கு கட்சி முழு ஆதரவை வழங்கும்.

நாடு தழுவிய தொழிலாளர் போராட்டங்கள்

மனிதாபிமானமற்ற சுரண்டல் மற்றும் மோசமான பணிச்சூழல்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, மற்றும் குறைந்தபட்ச ஊதி யத்தை மறுபரிசீலனை செய்து அதை வழங்கு வதை உறுதி செய்யத் தவறிய அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராகத் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மத்தியக் குழு பாராட்டுகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாஜக அரசு இந்தப் போராட்டங்களை அடக்க முயன்று, காவல்துறையினரைக் களமிறக்கியது. நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டனர், அவர்களில் பலர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி என்றும் துணை நிற்கும்.

வளரும் மதவாத அச்சுறுத்தல்கள்

போஜசாலா-கமல் மௌலா மசூதி வழக்கில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்று மற்றும் மத ரீதியான சர்ச்சைகள் மீண்டும் மீண்டும் தோண்டப்பட்டு, மதப் பிரி வினைகள் ஆழமடையும் அபாயத்துடன் தீர்க்கப்படும் ஒரு வளர்ந்து வரும் ஆபத்தான போக்கின் ஒரு பகுதியாகும். உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் விதிகளுக்கு முற்றிலும் முரணானது. நீதித்துறை, அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கை களை எவ்வித சமரசமுமின்றி நிலைநாட்ட வேண்டும்.

பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான அட்டூழியங்கள்

தேசிய தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் சமீபத்தில் நடந்த கொடூரமான கும்பல் பாலியல் வன்கொடுமைச் சம்பவம், நம் நாட்டில் பெண்கள் மீது அதிகரித்து வரும் அட்டூழியங்களையும் பாலியல் தாக்குதல்களையும் நினைவூட்டுகிறது. பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதா லும், நிர்வாக அமைப்பில் மனுவாத சித்தாந்தத் தின் ஆதிக்கம் நிலவுவதாலும், சாதி மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றங்கள் பற்றிப் புகார ளிப்பதும் நீதியைப் பெறுவதும் மிகவும் கடின மாகிவிட்டது. தவறான மற்றும் பலவீனமான நீதித்துறை அமைப்பின் காரணமாக, பாலியல் குற்றவாளிகளும், சாதி அட்டூழியங்களைச் செய்பவர்களும் விடுதலையாவதை பல பாஜக தலைவர்கள் பகிரங்கமாகக் கொண்டாடுவதைக் காண முடிகிறது.

நீட் தேர்வுத் தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ முறைகேடுகள்

நீட் (NEET) தேர்வுத் தாள் கசிவுக்குப் பின்னால் பாஜக தலைவர்களே பின்னணியில் இருந்தனர் என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது. ஒன்றிய அரசு தேர்வுகளை நடத்தும் பணியை தேசிய தேர்வு முகமையிடம் (NTA) ஒப்படைத்த பிறகு, தேர்வுத் தாள்கள் கசிவது இது முதல் முறையல்ல. தேசிய தேர்வு முகமை உடனடியா கக் கலைக்கப்பட வேண்டும், மேலும் தேர்வு களை நடத்தும் பொறுப்பு, முன்பு போலவே சம்பந்தப்பட்ட அரசு முகமைகளிடம் ஒப்படைக்கப் பட்டு பரவலாக்கப்பட வேண்டும். இந்த முறைகேடான கசிவு குறித்து முழுமையான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றவா ளிகள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கசிவுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கைகள் இயற்றப்பட வேண்டும். டிஜிட்டல் மதிப்பீட்டு முறையின் குறைபாடு களால், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு விடைத்தாள்க ளின் மதிப்பீடு மற்றொரு பெரும் குளறுபடியாக உருவெடுத்து வருகிறது. அரசு, மாணவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து முற்றிலும் அக்கறையற்றதாக உள்ளது. விடைத் தாள்களை உரிய கவனத்துடனும் அக்கறையுட னும் சரிபார்க்க ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கால அவகாசமும் வழங்கப்படுவதையும், மாணவர்கள் தாங்கள் தவறு ஏதுமின்றி பாதிக்கப்படாமல் இருப்ப தையும் உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) மீதான தடை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக ஊடகக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடையை யும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை உருவாக்கி யவரான அபிஜித் தீப்கே மீதான தாக்குதலையும் மத்தியக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது மீண்டும் ஒருமுறை பாஜகவின் சர்வாதிகாரத் தன்மையையும், மாற்றுக்கருத்துக்களையும் நையாண்டிகளையும் சகித்துக்கொள்ள மறுக்கும் அதன் போக்கையும் வெளிப்படுத்து கிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்குக் கிடைக்கும் பெரும் இணையவழி ஆதரவு, வேலை யின்மை போன்ற கடுமையான பிரச்சனைகளில் பாஜக அரசுக்கு எதிராக இளைஞர்களிடையே நிலவும் அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது. இளை ஞர்களின் உண்மையான கவலைகளைக் கவ னிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் விமர்சிப்ப வர்களை ‘தேசவிரோதிகள்’ என்று முத்திரை குத்தி, மீண்டும் ஒருமுறை தனது சகிப்புத்தன்மையற்ற முகத்தைக் காட்டுகிறது.

பிபா உலகக் கோப்பை ஒளிபரப்புச் சிக்கல்

ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பையை ஒளிபரப்புவ தற்கு இந்திய அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தியக் குழு கோருகிறது. ஒளிபரப்பாளர்களின் பெரு நிறுவன ஏகபோகமும், லாபம் தேடும் பிபா (FIFA) அமைப்பும், இந்திய விளையாட்டு ரசிகர்கள் இந்த முதன்மையான உலகளாவிய விளையாட்டு நிகழ்வைக் காண்பதைத் தடுக்கும் தற்போதைய முட்டுக்கட்டைக்குக் காரணமாக உள்ளன. அரசாங்கம் பொது ஒளிபரப்பு நிறு வனம் (பிரசார் பாரதி) மூலம் உடனடியாகத் தலையிட்டு, இந்த நிகழ்வு நேரலையில் இலவச மாகக் காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கியூபா மீதான அமெரிக்க ஏகாதிபத்திய அச்சுறுத்தல்

அமெரிக்கா மீண்டும் ஒருமுறை, கியூபாவை ‘கைப்பற்றும்’ என்று அச்சுறுத்தி, பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்கியுள்ளதுடன், கியூபா மீது நேரடி இராணுவப் படையெடுப்பு நடத்துவதாகவும் மிரட்டுகிறது. அமெரிக்கா, கியூபாவைச் சுற்றி ஆளில்லா உளவு விமா னங்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இயக்கி வருகிறது. மேலும் அதனை அச்சுறுத்தும் நோக்கத்தில் தனது ‘நிமிட்ஸ்’ (Nimitz) என்ற கடற்படை விமானம் தாங்கிக் கப்பல் குழுவை கரீபியன் கடல் பகுதிக்கு நகர்த்தியுள்ளது. அமெ ரிக்க நீதிமன்றத்தில் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது மற்றொரு அப்பட்டமான ஆக்கிரமிப்புச் செயலாகும். கியூபாவிற்கு ஆதர வாகவும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிர மிப்புக்கு எதிராகவும் மீண்டும் ஒருமுறை ஒன்று திரளுமாறு நாட்டு மக்களுக்கு மத்தியக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.

ஜூன் மாத ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரம்

ஈரான், பாலஸ்தீனம், வெனிசுலா, கியூபா ஆகிய நாடுகள் மீதான அமெரிக்காவின் தொடர் ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதி ராக, கட்சி ஜூன் மாதத்தில் ஒரு விரிவான நாடு தழுவிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தும். அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பெருந்திரளான மக்களைத் திரட்ட கட்சி முடிவெடுத்துள்ளது.

மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான போராட்டம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி அமல்படுத்தக் கோரி மகளிர் அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்களுக்கு முழு ஆதரவளிக்க மத்தியக் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக, கட்சி மற்ற வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து மக்களைத் தீவிர மாகத் திரட்டும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் இப்போராட் டங்கள் நாடாளுமன்ற வாயிலில் நடைபெறும்.

வாக்குரிமைப் பாதுகாப்புப் பிரச்சாரம்

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், குறிப்பாக வாக்களிக்கும் உரி மையை உறுதிசெய்யும் வகையிலும், கட்சி ஒரு விரிவான தேசியப் பிரச்சாரத்தை முன்னெ டுக்கும். தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப் பட்சமான செயல்பாடுகளையும், ஆளும் கட்சி யின் ஒரு துணை அமைப்பாகச் செயல்படும் அதன் பாரபட்சமான நடவடிக்கைகளையும் மைய மாகக் கொண்டு இப்பிரச்சாரம் அமையும். தேர்தல் ஆணையம் முழுமையான பாரபட்ச மற்ற மற்றும் நடுநிலையான பங்கை வகிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பதிவு முதல் தேர்தல் நடத்தை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்கு எண் ணிக்கை வரையிலான முழுத் தேர்தல் செயல்முறையிலும் முழுமையான வெளிப் படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பரவலான மக்கள் கருத்தை மார்க்சிஸ்ட் கட்சி திரட்டும்.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிரான போராட்டம்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள்ளாகவே, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு களை அவசர அவசரமாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது. இது பாஜக தலைமையி லான ஒன்றிய அரசின் ஏமாற்றுத்தனமான மற்றும் கார்ப்பரேட் சார்பு செயல்பாட்டு முறையை அம்பலப்படுத்துகிறது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்காகப் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிகளையும், உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களையும் எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் கட்சி உறுதியாக நிற்கிறது. ஒன்றிய அரசின் விதிகளின்படி இச்சட்டங்களை அப்படியே செயல்படுத்துவதற்குப் பதிலாக, அரசிய லமைப்பின் கீழ் தங்களுக்குள்ள மாநில சட்டமி யற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொழி லாளர் சட்டத் தொகுப்புகளில் உரிய திருத்தங்க ளைக் கொண்டுவந்து தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மாநில அரசுகளை வலியுறுத்தி கட்சி ஒரு தொடர் பிரச்சாரத்தை முன்னெடுக்கும். கேரளாவில் முன்பு அமைந்திருந்த இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசுக்கு ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்து, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான வழிகளைப் பரிந்துரைத்த நீதிபதி கோபால கௌடாவின் பரிந்துரைகளை அனைத்து மாநில அரசுகளும் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும் என்று மத்தியக் குழு கேட்டுக்கொள்கிறது. தமிழில் : ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.