கீழ்வேளூரில் சிபிஎம் வேட்பாளர் டி.நாகை பிரச்சாரம்
12 Apr 2026, 5:30 am

கீழ்வேளூரில் சிபிஎம் வேட்பாளர் டி.நாகை பிரச்சாரம்

கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் டி.நாகையை ஆதரித்து, தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பாப்பாகோவிலில் வெள்ளியன்று தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக மாவட்டச் செயலாளர் என்.கௌதமன், ஒன்றியச் செயலாளர் நாராயணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர் வெற்றி வேட்பாளர் டி.நாகையை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குச் சேகரிப்பு கீழ்வேளூர் பேரூராட்சியில் வெள்ளியன்று நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, திமுக பேரூர் கழகச் செயலாளர் அர்ச்சுனன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை அருள்செல்வன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.