மாற்றுத்திறனாளிகள், பழங்குடி மக்களின் நம்பிக்கையுடன் வீறுநடை போடும் பா.சுகந்தி மதுராந்தகத்தில் எழும் செங்கொடி பேரலை!
24 Sept 2026, 8:22 pm

மாற்றுத்திறனாளிகள், பழங்குடி மக்களின் நம்பிக்கையுடன் வீறுநடை போடும் பா.சுகந்தி மதுராந்தகத்தில் எழும் செங்கொடி பேரலை!

மதுராந்தகம், செப்.24-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் பா.சுகந்தி, எளிய மக்களின் நம்பிக்கைக் குரலாகத் தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில்ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பழங்குடியின மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உணர்வுப்பூர்வமான ஆதரவோடு செங்கொடி இயக்கம் வீறுநடை போட்டு வருகிறது. காட்டுப்பாதையைக் கடந்துசென்ற மக்கள் வேட்பாளர்.அண்டவாக்கம், சித்தாலமங்கலம், பிளாஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றதீவிரப் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, புதுப்பட்டு கிராமத்தில் காட்டுப்பாதையில் வசித்து வரும் 18பழங்குடியின குடும்பங்களை நேரில் சந்திக்க வேட்பாளர் பா.சுகந்தி இருசக்கர வாகனத்திலேயே பயணித்தார்.

பாரம்பரிய பாடலை பாடி வரவேற்ற பழங்குடியினர்அடிப்படை வசதிகளின்றித் தவிக்க்கும் தங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய பழங்குடியின மக்கள், நெகிழ்ச்சியுடன் தங்கள் பாரம்பரியப் பாடல்களைப் பாடி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். சாத்தமை பகுதியில் அமைந்த மலைவாழ் மக்கள் சங்கக் குடியிருப்புப் பகுதியில் எழுச்சிமிக்க முறையில் செங்கொடி ஏற்றப்பட்டது.

சட்டமன்றத்தில் ஒலிக்கட்டும் எளியோர் குரல் சூரைமேட்டு காலனி, மேல்மா ஆகிய பகுதிகளில் பிரச்சாரம்தொடர்ந்தபோது, மாற்றுத்திறனாளிகள் பா.சுகந்திக்கு உற்சாக வரவேற்புஅளித்தனர். “எங்களின் பராமரிப்புத்தொகையை உயர்த்தச் சட்டப்பேரவையில் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். எங்களின் உண்மையான முகமாக உங்களது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்ற முழு நம்பிக்கைஎங்களுக்கு உள்ளது” எனக் கூறிநெகிழ்ச்சியுடன் ஆதரவு தெரிவித்தனர்.

பழங்குடி மக்களின் பட்டாஉரிமையாகவும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரக் குரலாகவும் சட்டமன்றத்தில் எதிரொலிக்கப் போவது செங்கொடிதான் என்றநம்பிக்கையோடு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு மக்கள் திரளாக வாக்களிக்கத் தயாராகிவருகின்றனர். அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான, இடதுசாரிகளின் பிரச்சாரம் எளியமக்களின் பேராதரவோடு நாளுக்கு நாள் மக்கள் பேரலையாக உருவெடுத்து வருகிறது.