தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

11 Apr 2026, 5:30 am
திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

நாமக்கல், ஏப்.10- குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.மாதேஸ்வரனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியக் குழுவின் சார்பில் வெப்படைச்சாவடி, அக்ரஹாரம் பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றியச் செயலாளர் லட்சுமணன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு, கட்சி கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

இதேபோன்று, மல்லசமுத்திரம் மற்றும் கவையம்பட்டியில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பணிகள் குறித்து பேரவைக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, சுரேஷ், திமுக ஊராட்சி செயலாளர் சிவம் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்று மாதேஸ்வரன் எம்.பி., பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டு காலமாக மக்களுக்குத் தேவையான திட்டங்களை ஈஸ்வரன் செய்துள்ளார். எனவே இ.ஆர்.ஈஸ்வரன் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிடுவதால், அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைப்போம் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.