தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாரங்காகடவு பாலம் அமைக்கக் கோரி mமார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

1 hour before
நாரங்காகடவு பாலம் அமைக்கக் கோரி mமார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

நாரங்காகடவு பாலம் அமைக்கக் கோரி mமார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

உதகை, அக். 18-கூடலூர் அருகில் உள்ள புளியம்பாறை நாரங்காகடவு பகுதியில் கான்கிரீட் பாலம் அமைப்பது தொடர்பாகவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் செயல்பாடுகள்குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரக் கூட்டம் ஞாயிறன்று புளியம்பாறை கடைவீதியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரையடுத்த, புளியம்பாறை பகுதி மக்கள் ஆற்றைக் கடப்பதற்கும், தங்கள் அன்றாடப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும் நாரங்காகடவு பகுதியில் கான்கிரீட் பாலம் வேண்டுமென்பது நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. இப்பகுதி மக்களின் இந்த துயரத்தை போக்கவும், அவர்களின் அவசியமான தேவையை நிறைவேற்றவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பல்வேறு இயக்கங்களையும் முன்னெடுத்து வருகிறது.

பாலம் இல்லாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள், நோயாளிகள் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களில் படும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதுதொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.

முன்னதாக, புளியம்பாறை சிபிஎம் கிளைச் செயலாளர் சுபைர் தலைமை தாங்கிய இக்கூட்டத்திற்கு, பந்தலூர் ஏரியா கமிட்டி உறுப்பினர் ஹசைன் வரவேற்றார். இதில், கட்சியின் நீலகிரி மாவட்டக் குழு உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான இராசி இரவிக்குமார் மற்றும் வன உரிமை அங்கீகார சட்டம் குறித்து வழக்குரைஞர் சந்தோஷ் ஆகியோர் உரையாற்றினர்.இந்நிகழ்வில் பந்தலூர் ஏரியா கமிட்டி உறுப்பினர் கே.எம். சாஜி, வாலிபர் சங்க ஏரியா கமிட்டி உறுப்பினர் ரஃபீத் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், பழங்குடியினர் சங்க நிர்வாகி கோபாலன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.