தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய முதல்வரிடம் நாடு நிறைய எதிர்பார்க்கிறது

11 Jul 2026, 10:49 pm
புதிய முதல்வரிடம் நாடு நிறைய எதிர்பார்க்கிறது

புதிய முதல்வரிடம் நாடு நிறைய எதிர்பார்க்கிறது

மு. வீரபாண்டியன் பேட்டி

தருமபுரி, ஜூலை 11- முதல்வர் புதியவர் அவரிடமிருந்து திட்டங்கள் அதிகமாக நாடு எதிர் பார்ப்பதாக சிபிஐ மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். தருமபுரியில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களி டம் பேசுகையில், மேகதாது அணை கட்டக்கூடாது. அதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் கிடைக்காது. இதனை கண்டித்து ஓசூரில் சிபிஐ சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழர்கள் மற்றும் கன்னடர்கள் சகோ தரர்களாக உள்ளனர். வட்டாள் நாகராஜ் சொல்வது சரியில்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். ஈரான் மீது மீண்டும் போர் கொடுக் கப்பட்டுள்ளது. வளைகுடா நாட் டில் அதிக மலையாளம் பேசும் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களின் பணிப் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண் டும். அமைதியாக இருக்கும் ஈரான் மீது அமெரிக்க போர் தொடுப்பதை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்து குரல் கொடுக்க வேண்டும். எதிர்பாராத துயர் சூழல்களை நாங் கள் எதிர்ப்பதில்லை. கரூர் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். முதல்வர் புதியவர், அவரி டமிருந்து திட்டங்கள் இன்னும் அதிக மாக நாடு எதிர்பார்க்கிறது. ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, மதவாத சக்தி களை வீழ்த்த வேண்டும். கட்சிகள் வெற்றி பெறுவது, தோல்வியடைவது இயல்பு. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன் றிணைய வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் வழங்கு வதில், இந்தியாவிலே சமூக நலத் திட்டங்கள் வழங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடம். கடந்த ஆட்சி கால நலத்திட்டங்கள் தொடர வேண்டும். விருப்பு வெறுப்பை தாண்டி நலத்திட்டங் கள் தொடர வேண்டும் என்றார். பேட்டியின் போது மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ். தேவராசன் மாவட்டச் செயலாளர் எஸ்.கலைசெல் வம், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் நவீன் ஆகியோர் உடனி ருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.