தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்

4 Oct 2026, 2:02 am
தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது  சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்

தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்

திருப்பூர், அக்.3 -தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வீரபாண்டியன் ப.லட்சு

மணனை ஆதரித்து சனியன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தலில் வீதிகளில் மக்களை சந்திக்கிறோம். முழுக்க முழுக்க களில் கூட விலை உயர்ந்த பெரிய பெரிய அளவில் உள்ள 50, 60 வாகனங்கள் இருக்கிறது. அதனுடைய முன்னணி தலைவர்கள் ஒரு வெள்ளை தாளை வைத்துக்கொண்டு ஒரு பென்சில் பேனாவோடு குறிப்பெடுக்கிறார். ஏழைகளை பார்த்து கோரிக்கைகளை கேட்கிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள். ஆனால் அவர்கள் என்ன கூறுகிறார்கள்? குறிப்பெடுத்து அந்த செல்போனில் பணம் போடுவது எப்படி போன் பே, குள் பே எவ்வாறு செய்வது என்ற கணக்கு எடுக்கிறார்கள். நாடு இந்த திசையில் பயணித்தால் தேர்தல் கேள்விக்குள்ளாகிவிடும். தேர்தல் முறை கேள்விக்குள்ளாகும். நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும். தேர்தல் ஆணையம் தூங்கி வழிகிறது, பாரபட்சமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் தோற்று விட்டது.

மலை மக்களை வெளியேற்ற துடிக்கிறார்கள். ஏழைகள், சாதாரண தெருவோரத்தில் வியாபாரம் செய்கிறவர்களைஆங்காங்கே அப்புறப்படுத்துகிறார்கள். ஏஐடியுசி, சிஐடியு இதை எதிர்த்து போராடுகிறது, வழக்குகளை சந்திக்கிறது. விலைவாசி, பால் அரிசி பருப்பு அனைத்து பொருளும் விலை உயர்ந்துவிட்டது. வாங்கும் சக்தி ஏழைகளுக்கு இல்லை. இதை பற்றி அரசியலில் நாங்கள் பேசுகிறோம். ஒரு வாய்ப்பை எங்களுக்கு தாருங்கள் என்று சொல்கிறோம். ஆனால் இது போன்ற குரல் ஏதுவும் எதிர் முகாமில் கேட்கவில்லை. முதல்வரே பிரச்சாரத்தில் அரசியலுக்கு அப்பால் தான் பேசுகிறார். இது போன்ற சக்திகளுக்கு ஒரு பாடத்தை புகட்டவேண்டும். இடதுசாரிகளுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்க வேண்டும்.

இங்கு வந்த ஸ்டாலின் நாங்கள் அருகில் இல்லாத காரணத்தினால என்னவோ தெரியவில்லை தடம்புரண்டு பேசுகிறார். ஆனால் உருவ கேலி ஏற்புடையதல்ல. மொழி, உடல் மொழியும் மிகுந்த கண்ணியத்தோடு இருக்க வேண்டும்.

மேலும், சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை தமிழில் நீண்ட காலமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் அது திருத்தப்பட்டு இந்தியில்எழுதப்பட்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல. அவரவர் மாநிலத்தில் அவரவர் மொழிக்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே இதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.ஒன்றிய அரசு தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆட்சியின் போதும் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதை அன்றைய ஆட்சியாளர்கள் எதிர்த்தார்கள். அதே வழியில் இன்று இத்தகைய மொழி திணிப்புகளை தமிழக அரசு எதிர்க்க முன்வர வேண்டும்என்பதோடு மட்டுமல்ல இது போன்ற நிகழ்வுகள் ஏன் நடைபெறுகிறது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று முதல்வரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், என்றார்.

முன்னதாக இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கே.சுப்பராயன் எம்.பி., சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.