தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விழுப்புரத்தில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் விலை உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

8 hours before
விழுப்புரத்தில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்  விலை உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

விழுப்புரத்தில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் விலை உயர்வை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

விழுப்புரம், நவ.3-அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

விலைவாசி உயர்வை கண்டித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் சிபிஐமாவட்ட செயலாளர் ஆ.சவுரிராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பண்டிகைக்காலம் நெருங்குகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள்தான்.ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. விலை உயர்வு அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. எனவே போர்க்கால சூழல் போல அரசு கவனத்தில் கொண்டு, ஏழை மக்களின் நலன்காக்கும் வகையில் அத்தியாவசியப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற மக்கள்பயன்படுத்துகின்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராமல் இருப்பதற்கு தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது எந்த சூழலிலும் 100 பொருள்களின் விலை உயரக் கூடாது, இதற்காக சட்டம்இயற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரிகள் கேட்டுக்கொண்டோம். அதில் மருந்து, மாத்திரைகளும் அடங்கும். பால், பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை எந்த சூழலிலும் உயரக்கூடாது என்பதற்காக சட்டம் இயற்றுமாறு நாங்கள்கேட்டுக் கொண்ட நிலையில், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அதை கடந்து சென்றுவிட்டார். இப்போதும் நாங்கள் அதை வலியுறுத்துகிறோம்.ஒன்றிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும்குழந்தைகள் காணாமல் போகுதல் போன்றவை நிகழ்ந்து வரும் நிலையில், தமிழக காவல்துறை சற்று கூடுதல்கவனம் செலுத்த வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தவேண்டும்.

இந்தியாவில் 13 கோடி பேரின் வாக்குரிமையைப் பறித்து இருக்கிறார்கள். இது ஜனநாயகப் படுகொலையாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் பார்வையாளர் மாடத்தில் பார்த்துக்

கொண்டிருக்க, அதிகரத்தை குவித்துக் கொண்டுள்ள உள்துறை அமைச்சர் பார்த்துக் கொண்டிருக்க தலைமைத் தேர்தல் ஆணையர்இந்த படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார். இந்தப் படுகொலையைக் கண்டிக்கதமிழக முதல்வர் முன்வராதது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தை காக்கும் போரில் முதல்வர் தன்னை இணைத்துக் கொள்வது நல்லது.பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்கட்ட முடியாது. கட்டக்

கூடாது. எனவே தமிழக அரசு பட்டினப்பாக்கத்தில் பழையக் குடியிருப்புகளை இடிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என எது வந்தாலும் இடதுசாரிகளாகிய நாங்கள் ஒன்று கூடி அரசியல் முடிவுகளை எடுப்போம். சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் செல்லும் நிகழ்வுக்கு தமிழக அரசு, காவல்துறை பொறுப்பேற்க வேண்டும். சிறைச்சாலைகளில் சீர்திருத்தம் தேவை. கைதிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்என்ற வழிகாட்டு

தல்கள் சிறை அலுவலர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்போதுமுடிவெடுக்கும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.