வேளாண் கடனை முழுமையாக ரத்து செய்க! மாநிலம் முழுவதும் சிபிஐ ஆர்ப்பாட்டம்
29 Jun 2026, 9:52 pm

வேளாண் கடனை முழுமையாக ரத்து செய்க! மாநிலம் முழுவதும் சிபிஐ ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 29 - வேளாண் கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று (ஜூன் 29) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள் கைகளைக் கண்டித்தும், தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலி யுறுத்தியும் 100-க்கும் மேற்பட்ட மையங் களில் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டச் செயலா ளர் எஸ்.கே. சிவா தலைமையில் சைதாப் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தி, தேர்தல் வாக்குறுதியில் தவெக கூறியபடி 5 ஏக்கருக்கு குறைவாக உள்ளவர்களுக்கு முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சத விகிதமும் கூட்டுறவுக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். விபி ஜிராம்ஜி என்கிற வேலை திட்டத்தை பாஜக ஆட்சி செய்யும் மாநி லங்களே எதிர்க்கின்றன. எனவே, மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்திற்கான முழுத்தொகையும் ஒன்றிய அரசே தருமாறு வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.