முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

5 Jun 2026, 1:37 am
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்
<p><strong>பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம் </strong></p><p>திருவில்லிபுத்தூர், ஜூன் 4- தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவில்லி புத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் காமராஜர் சிலை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முனீஸ்வரன் தலைமை தாங்கி னார். நகரச் செயலாளர் மூர்த்தி, வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மம்சாபுரம் பேரூராட்சி கழகச் செயலாளர் ராஜேந்திர சோழன், திருவில்லிபுத்தூர் தாலுகா துணைச் செயலாளர் செல்வம், மகாலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram