வடசென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
30 Jun 2026, 12:10 am
<p><strong>வடசென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்</strong></p><p>பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, ஆட்டோ கேஸ் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும், தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தங்கசாலை மணிகூண்டு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் இரா.முத்தரசன், மாவட்டச் செயலாளர் வெங்கட் வேம்புலி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
