சிலிண்டர் முறைகேடு: கவரைப்பேட்டை எரிவாயு முகமை அலுவலகத்தை சிபிஐ முற்றுகை!
7 Jun 2026, 2:00 am

சிலிண்டர் முறைகேடு: கவரைப்பேட்டை எரிவாயு முகமை அலுவலகத்தை சிபிஐ முற்றுகை!

திருவள்ளூர், ஜூன் 6-

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட சமை

யல் எரிவாயு சிலிண்டர்களைப் பயனாளி

களுக்கு வழங்காமல், கடந்த 4 ஆண்டு களாகக் கள்ளச்சந்தையில் முறைகேடாக விற்பனை செய்த கவரைப்பேட்டை ‘ஆர்ஏஎன் கேஸ் ஏஜென்சி’ உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 6) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

கவரைப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் விநி யோகம் செய்யாமலேயே விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாகக் குறுஞ்செய்தி அனுப்புவது, பில் தொகையை விடக் கூடுதல் பணம் வசூலிப்பது மற்றும் ஏழைகளின் சிலிண்டர்களைக் கூடுதல் விலைக்குக் கள்ளச்சந்தையில் விற்பது என இந்த முகமை தொடர்ந்து முறை கேடுகளில் ஈடுபட்டு வருவதாகப் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த முறைகேட்டைக் கண்டித்து கவரைப்பேட்டையில் உள்ள ஆர்ஏஎன் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தை ஏராள மான பொதுமக்களும் பெண்களும் முற்று கையிட்டனர். இப்போராட்டத்திற்கு சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினர் ஷாகின்ஷா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் என்.எஸ்.பிதாப்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.வி.செந்தில், ஒன்றிய குழு உறுப்பினர் எம்.ரவிச்சந்திரன் மற்றும் ஏஐஒய்எப் மாவட்டச் செயலாளர் மோகன்பாபு ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.