முந்தய பக்கம்

பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்க! ஜூன் 29-இல் சிபிஐ ஆர்ப்பாட்டம்

13 Jun 2026, 11:13 pm
பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்க! ஜூன் 29-இல் சிபிஐ ஆர்ப்பாட்டம்

பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்க! ஜூன் 29-இல் சிபிஐ ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 13- விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஜூன் 29 ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அறிவித்துள்ளது. கோவையில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி விரிவுபடுத்துவது, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி விலை குறைப்பு, ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடர்வது, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram