தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் சிபிஐ இடம்பெறுவதற்கான சூழல் இல்லை! மு. வீரபாண்டியன் பேட்டி

11 Jun 2026, 9:20 pm
தற்போதைய நிலையில்  திமுக கூட்டணியில் சிபிஐ இடம்பெறுவதற்கான சூழல் இல்லை! மு. வீரபாண்டியன் பேட்டி

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் சிபிஐ இடம்பெறுவதற்கான சூழல் இல்லை! மு. வீரபாண்டியன் பேட்டி

கோயம்புத்தூர், ஜூன் 11 - தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கான சூழல் இல்லை என்று அக்கட்சி யின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரி வித்துள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தை தொடர்ந்து மு. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து மக்களின் உரிமைகளுக்காகவும், மதச்சார்பின்மையைக் காக்கவும் தொடர்ந்து போராடுவோம். தற்போதைய சூழ லில், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி விட்டதா லும், இந்தியா கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என திமுக அறிவித்து விட்டதாலும், ஒரு கூட்டணியாக அமைந்து போட்டியிடும் சூழல் இங்கு இல்லை. எனவே, தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும், எங்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மட்டுமே அரசியல் பகை. மற்றபடி திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய அனைத்தையும் ஜனநாயக சக்திகளாகவே கருதுகிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சி யாருடைய தயவிலும் இயங்கும் இயக்கம் அல்ல. சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இடம் கிடைக்காவிட்டாலும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக, தெருக்களையே நாடாளுமன்றமாக்கி தனது குரலை ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்களின் ஒரே கொள்கைப் பகை, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான். தேசத்தின் பன்முகத்தன்மையையும், மதச்சார்பின்மை யையும் காக்கும் சமரசமற்ற கொள்கைப் போரில் இடது சாரிகள் தொடர்ந்து களமாடுவோம்.

​எதிர்வரும் உள்ளாட்சி, நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களின் போது, அரசியல் நிகழ்ச்சிப் போக்கு களைக் கண்காணித்து, கட்சியின் தேசிய நிர்வாகக் குழு வழிகாட்டுதலின்படி இடதுசாரி அணிகளோடு ஜனநாயக சக்திகளை இணைத்து புதிய கூட்டணிகள் குறித்து முடி வெடுப்போம்.

இவ்வாறு மு. வீரபாண்டியன் கூறினார். பேட்டியின் போது, சிபிஐ மாநில பொருளாளர் எம். அறுமுகம், மாவட்டச் செயலாளர் சி. சிவசாமி ஆகி யோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.