முந்தய பக்கம்

சிபிஐ தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை

2 Apr 2026, 3:50 pm
சிபிஐ தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை
<p><strong>சிபிஐ தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை</strong></p> <p>சென்னை, ஏப். 2 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் து. ராஜா மற்றும் தேசியச் செயலாளர் ராமகிருஷ்ண பாண்டா ஆகியோர் தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். து. ராஜா - ஏப்ரல் 13 மற்றும் 14 அன்று சென்னை சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கொளத்தூர், திருவொற்றியூர், ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதிகளிலும், ஏப்ரல் 15 அன்று வேலூர், குடியாத்தம், கே.வி. குப்பம் தொகுதிகளிலும், ஏப்ரல் 16 அன்று கடலூர், காட்டு மன்னார் கோவில் தொகுதிகளிலும், ஏப்ரல் 17 அன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர் தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்கிறார். தேசிய செயலாளர் ராமகிருஷ்ண பாண்டா ஏப்ரல் 12 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியிலும், ஏப்ரல் 13 அன்று திருப்பூரிலும் பரப்புரை மேற்கொள்வார். இந்த பயணத்திட்டம் திருத்தத்திற்கு உட்பட்டது என கட்சி தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram