சிபிஐ(எம்எல்) லிபரேசன் வேட்பாளர் ஆ. ரேவதி விலகல் கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரைக்கு ஆதரவு!
5 Apr 2026, 3:36 pm
<p><strong>சிபிஐ(எம்எல்) லிபரேசன் வேட்பாளர் ஆ. ரேவதி விலகல் கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரைக்கு ஆதரவு!</strong></p>
<p>புதுக்கோட்டை, ஏப். 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளர் எம். சின்னதுரைக்கு ஆதரவு தெரிவித்து, சிபிஐ(எம்-எல்) லிபரேசன் வேட்பாளர் ரேவதி போட்டியிலிருந்து விலகினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் சார்பில் அக்கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஆ. ரேவதி கந்தர்வகோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இங்கே ஏற்கெனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் எம். சின்னதுரை போட்டி யிடும் நிலையில், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஆ. ரேவதி போட்டியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் தேர்தல் அலுவலகத்திற்கு, ஞாயிறன்று வருகை வந்த சிபிஐ(எம்-எல்) லிபரேசன் வேட்பாளர் ஆ. ரேவதி, சிபிஎம் வேட்பாளர் எம். சின்னதுரைக்கு தமது கட்சியின் ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்து சால்வை அணிவித்தார். மேலும், தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வைத்திருந்த வைப்புத் தொகை ரூ. 5 ஆயி ரத்தையும் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னதுரையிடம் தேர்தல் நன்கொடை யாக வழங்கினார். நிகழ்வில், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் எம்.பரமசிவம், மா. தமிழய்யா, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ராமையன், ஏ. ஸ்ரீதர், கி. ஜெயபாலன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் வளத்தான், ராஜாங்கம், மணிமேகலை, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் ஜி. பன்னீர் செல்வம், எஸ். நாராயணசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் வி. ரெத்தின வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
