தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் முயற்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

5 Jul 2026, 10:42 pm
போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் முயற்சி  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
<p><strong>போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் முயற்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</strong></p><p>சென்னை, ஜூலை 5 - “மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது, தேர்ந்தெ டுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறி விப்பாகும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக் கையில், “ஜூலை 5 அன்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பொழுது, மக்கள் தங்களது பிரச்ச னைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம். அவர்களது கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என பேசியிருப்பதும், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை கண்டறிந்து, அவற்றை சரி செய்ய முயற்சி செய்பவர்கள் தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையில் முறையிடலாம் என்றும் பேசி யிருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும். ஆளுநரின் இந்த செயல் மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதி கார அத்துமீறலாகும். ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை தமிழ்நாடு அரசும், முதல்வரும் தடுத்து நிறுத்த உடனடி யாக, சட்ட நடவடிக்கைகளையும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆளுநர் அர்லேகரின் அத்து மீறலை தடுத்து நிறுத்த, குடியரசுத் தலைவர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.