முந்தய பக்கம்

காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: சிபிஐ

24 Jul 2026, 9:13 pm
காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: சிபிஐ
<p><strong>காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: சிபிஐ</strong></p><p>சென்னை, ஜூலை 24 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில வாரங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குமுன், தூத்துக்குடி காவல்துறையினர் கடந்த ஜூலை 17 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்ற அருணாச்சலம் என்பவரின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. விசாரணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல தீர்ப்புகளில் வலி யுறுத்தியுள்ளன. பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் சில பிரிவுகளும் விசாரணை நடைமுறை குறித்து வழிகாட்டியுள்ளன. இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் காவல்துறையினர் அதிகார அத்து மீறலில் தொடர்ந்து ஈடுபடுவதும், இதில் உயிர்கள் பலியா வதும் கவலையளிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. காவல் மரணங்களை முற்றிலுமாகத் தடுக்கும் வகை யில் காவல்துறை நிர்வாகத்தைச் சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளதுடன், தூத்துக்குடி காவல் மரணத்தில் பலியான அருணாச்சலம் குடும்பத்திற்கு இழப்பீடும், நீதியும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram