தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக-ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்துவோம்; இந்தியாவை காப்போம்! ஆக.6-15 நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம்

16 Jun 2026, 10:35 pm
பாஜக-ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்துவோம்; இந்தியாவை காப்போம்! ஆக.6-15 நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம்

பாஜக-ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்துவோம்; இந்தியாவை காப்போம்! ஆக.6-15 நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம்

து.ராஜா பேட்டி சென்னை, ஜூன் 16 - ‘பாஜக-ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்துவோம்; இந்தி யாவை காப்போம்’ எனும் முழக்கத்தோடு ஆகஸ்ட் 6 முதல் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செவ்வா யன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மோடியின் கொள்கைகள் ஏழை மக்க ளுக்கு எதிரானது; இந்தியப் பொருளாதாரம் நொடிந்து, அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்ந்து வருகிறது. மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் எரிபொருள் நெருக்கடி ஏற் பட்டுள்ளது. அமெரிக்கா வால் இந்தியக் கப்பல் தாக்கப்பட்டு 3 பேர் உயிரி ழந்தபோது கூட பிரதமரால் கண்டிக்க முடியவில்லை. சாதி, மதப் பெயரால் மக்க ளைப் பிளக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்பிரச்சாரம் நடைபெறு கிறது. தொடர்ந்து செப்.1 அன்று தில்லியில் மாபெரும் பேரணி நடைபெறும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி கள் நம்பிக்கையுடன், இணக்கமாகச் செயல்பட வேண்டும்” என்றார்.

ஜூன் 29-ல் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை வரவேற்ற சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி யும் ஜூன் 29 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.

மேலும், எதிர்காலக் கூட்டு இயக்கங்கள் குறித்து ஆலோசிக்க சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 17 அன்று பாலன் இல்லத்தில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.