தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மினி ஸ்டேடியம் அமைப்பதைக் கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

28 Dec 2025, 5:05 pm
தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்  மினி ஸ்டேடியம் அமைப்பதைக் கைவிடுக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
<p><strong>தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் &nbsp;மினி ஸ்டேடியம் அமைப்பதைக் கைவிடுக &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</strong></p> <p>திருவள்ளூர், டிச. 28- &nbsp;ஊரெல்லாம் அரசு நிலங்கள் இருக்க, பூவலம்பேட்டில் தலித் மக்களுக்கு வழங்கிய விவசாய நிலத்தில் மினி ஸ்டேடியம் அமைப் பதைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி அருகில் உள்ள பூவலம்பேடு ஊராட்சி, தலித் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அனைவரும் விவசாயக் கூலித் தொழி லாளர்கள். துண்டு நிலங்கள் கூட இல்லாத அம்மக்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த மக்களுக்கு அமிர்தமங்கலம் கிராமத்தில் சர்வே எண் 94-இல் விவ சாயம் செய்ய, 1970-ஆம் ஆண்டு எந்த வித நிபந்தனைகளும் ஏதுமின்றி 7 &nbsp;குடும்பங்களுக்கு 6.36 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. பொன்னேரியில் உள்ள தனி வட்டாட்சியர் பட்டாக் களைப் பெற்றுக்கொள்ளுமாறு அப்போதே அறிவுறுத்தியுள்ளனர். படி ப்பறிவு இல்லாத காரணத்தால் பட்டாக்களைப் பெறத் தவறிவிட்டனர். இந்த நிலத்தை நம்பித்தான் செல்லன், திருப்பதி, தொம்பரை, கஜேந்திரன், பட்டையன், வேலாயுதம், இமாசலம் ஆகிய 10-க்கும் மேற்பட்ட &nbsp;குடும்பங்கள் பயனடைந்து வந்தனர். விவசாயம் செய்து வந்த நிலையில், பாசன வசதி ஏதும் அரசு தரப்பில் செய்துகொடுக்காததால், யூக்கலிப் டஸ் மரங்களை வளர்த்து வருகின்ற னர். பல தலைமுறைகளாக அந்தச் சந்ததியினர் மேற்கண்ட நிலத்தில் விவ சாயம் செய்து ஜீவனம் நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில் தற்போது திடீரென மேற்படி நிலத்தில் கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜ் தொகுதி நிதியிலிருந்து, ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடி யம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று &nbsp;வருகின்றன. இதற்குத் தலித் மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலத்தை நம்பித்தான் தலித் குடும்பத்தி னர் உள்ளனர். மேலும் பயனாளிக ளுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கா மல் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக ஜேசிபி எந்திரங் களைக் கொண்டு வந்து நிலங்களைச் சமன்படுத்தி வருகின்றனர். சிபிஎம் வேண்டுகோள்: &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ். கோபால், வட்டச் செயலா ளர் டி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் &nbsp;சனிக்கிழமையன்று (டிச. 27), பூவ லம்பேடு தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். இது குறித்து மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் தெரிவிக்கையில், &ldquo;மினி ஸ்டேடியம் கொண்டு வருவதை வரவேற்கிறோம். ஆனால் 50 ஆண்டுக ளுக்கு முன்பு தலித் மக்களுக்கு வழங்கிய நிலத்தில் மினி ஸ்டேடியம் அமைப்பது ஏற்புடையதாக இல்லை. அந்த நிலத்தைத் தலித்துகள் கையில் ஒப்படைக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். பூவலம்பேடு ஊராட்சியில் அரசிற்குச் சொந்தமான பல்வேறு வகையான நிலங்களை அங்குள்ள வசதிபடைத்த ஆதிக்க சாதியினர் அனு பவித்து வருகின்றனர். அதை யெல்லாம் விட்டுவிட்டுத் தலித் மக்க ளின் அனுபவத்தில் உள்ள நிலங் களை மட்டும் தேடிப் பிடித்து விளை யாட்டு அரங்கம் கட்டுவதை ஏற்க முடி யாது. அந்த நிலத்தில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்களைக் கூட வருவாய்த் துறை யினர் மற்றும் வட்டார வளர்ச்சித் துறை அலுவலர்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்துச் செல்கின்றனர். அந்த மக்களின் கருத்துகளைக் கூடக் கேட்கா மல் அராஜகமாகச் செயல்படுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மேலும் கும்மி டிப்பூண்டியில் இருந்து 16 கி.மீ அப்பால் உள்ள அமிர்தமங்கலத்தில் அமைப்பது அரசு பணம் ரூ. 3 கோடியை வீணாகும் செயலாகும். இவ்வளவு தூரம் சென்று யாரும் பயன்படுத்த முடி யாது; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும். மினி ஸ்டேடியம் அமைப்பது அனைத்துத் தரப்பு இளைஞர்களும் பயனடையும் வகையில், கும்மிடிப் பூண்டி நகருக்கு அருகில் அமைக்கப் பட வேண்டும். இதில் தமிழ்நாடு துணை &nbsp;முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்,&rdquo; எனவும் வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.