சிபிசிஎல் சாதனை கடந்த நிதியாண்டில் 11.71 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு
11 May 2026, 9:27 pm
<p><strong>சிபிசிஎல் சாதனை கடந்த நிதியாண்டில் 11.71 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு</strong></p><p>சென்னை, மே 11- சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் , 2026 மார்ச் 31-உடன் முடி வடைந்த நிதியாண்டில் 11.71 மில்லியன் டன் கச்சா எண்ணெய்ச் சுத்திகரிப்பு செய்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறனில் 112 சதவீத செயல்பாடாகும். திட்ட மிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடை பெற்ற போதிலும், மணலி சுத்திகரிப்பு நிலை யத்தில் உள்ள மூன்று அலகுகளும் தடை யின்றி இயங்கியதே இந்தச் சாதனைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் போன்ற மதிப்புமிக்க பொருட்களின் உற்பத்தித் திறன் 78 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்ப தால், கச்சா எண்ணெய்யைத் தேர்வு செய்வ தில் உள்ள கூடுதல் வாய்ப்புகளும், 160-க்கும் மேற்பட்ட வகை கச்சா எண்ணெய்களைப் பயன்படுத்தும் வசதி யும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரண மாக அமைந்தன. கச்சா எண்ணெய் சுத்தி கரிப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பில் சிபிசி எல் காட்டிய முனைப்பு, அதன் செயல் பாட்டுத் திறனைப் பறைசாற்றும் வகை யில் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.</p>
