சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105-ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் எம்.ஏ. பேபி - இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
10 Jul 2026, 8:38 pm

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105-ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் எம்.ஏ. பேபி - இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

புதுதில்லி, ஜூலை 10 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) தொடங்கப்பட்டதன் 105-வது ஆண்டு நிறை வைக் குறிக்கும் வகையில், புதுதில்லியில் உள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்தி ருந்த கருத்தரங்கில், இடது சாரிக் கட்சிகளின் தலை வர்கள் கலந்துகொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஆர். அருண் குமார் ஆகியோர் பங்கேற்ற னர்.

வறுமையை ஒழித்த மக்கள் சீனம்! இக்கருத்தரங்கில் உரை யாற்றிய எம்.ஏ. பேபி, கோடிக் கணக்கான மக்களை வறு மையிலிருந்து மீட்டெடுத் தது, முழுமையான வறுமை யை ஒழித்தது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது மற்றும் சீனத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்குத் தலைமை தாங்கியது ஆகிய வரலாற்று சாதனைகளுக்காக சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் தலைமைக்கும், சீன மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா உடனான பழமையான தொடர்பு இந்தியா மற்றும் சீனா வுக்கு இடையிலான பல நூற் றாண்டுகள் பழமையான நாகரிகத் தொடர்புகள், ஏகா திபத்திய எதிர்ப்பு ஒற்றுமை யின் பகிரப்பட்ட மரபு மற்றும் சமாதான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் தொடர்ச்சியான முக்கி யத்துவம் ஆகியவற்றையும் பேபி நினைவு கூர்ந்தார்.

இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி என்பது ஒன்றின் இழப்பில் மற்றொ ன்று ஆதாயமடையும் (zero-sum game) போட்டி அல்ல என்பதை சுட்டிக் காட்டிய எம்.ஏ. பேபி, இரு தரப்பு வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்! மேலும், இரு நாடுகளின் நலனுக்காகவும், ஒட்டு மொத்த தெற்குலக நாடு களின் நலனுக்காகவும் பிரிக்ஸ் மற்றும் எஸ்சிஓ போன்ற தளங்களின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் பேபி வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ பெய்ஹாங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் து. ராஜா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் மற்றும் சிபிஐ(எம்எல்) லிப ரேசன் மத்தியக்குழு உறுப்பி னர் ராஜீவ் திம்ரி ஆகியோ ரும் கருத்தரங்கில் உரை யாற்றினர்.