தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் போராட்டத்திற்கு துணையாக நிற்போம்! பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

29 May 2026, 8:10 pm
சிபிஎம் போராட்டத்திற்கு துணையாக நிற்போம்! பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

சிபிஎம் போராட்டத்திற்கு துணையாக நிற்போம்! பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

கேரள முன்னாள் முதல மைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தற்போதைய மாநில எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜய னின் திருவனந்தபுரம், கண்ணூர் இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செய லாளர் அலெக்ஸ் கோர்டன், சர்வ தேசச் செயலாளர் கெவன் நெல்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பினராயி விஜயன் இல்லத்தில் அரசு முகமைகளால் நடத்தப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட சோதனைகளை பிரிட்டன் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக் கிறது.

மேலும் அமலாக்கத்துறை தில்லி தலைமையகத்திற்கு வெளியே பினராயி விஜயனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல தலைவர்கள் கைது செய்யப் பட்டதையும் பிரிட்டன் கம்யூனிஸ்டு கள் கண்டிக்கிறார்கள்.

வலதுசாரி முற்போக்கு மக்கள் சக்திகளு க்கு எதிரான ஆயுதங்களாக வலது சாரி, பழமைவாத அரசாங்கங்கள் சட்டத்தையும் காவல்துறையின் ஒடுக்குமுறையையும் பயன்படு த்துவது செக்குடியரசு, ஜோர்டான், கென்யா மற்றும் இப்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா வரை ஒரு சர்வ தேச நிகழ்வாக மாறியுள்ளது.

இந்தியாவின் பொதுவுடைமை வாதிகளுடனும், நமது சகோதரக் கட்சியான சிபிஎம் உடனும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

சங்கங் கள் அமைக்கும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கம்யூனிஸ்டு கள் ஒன்றிணைந்து செயல்படு வதற்கான அரசியல் உரிமைகள் ஆகியவற்றின் மீது இந்திய அர சின் அரசியல்மயமாக்கப்பட்ட முக மைகள் நடத்தும் ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதத் தாக்கு தல்களை எதிர்த்துப் போராடும் சிபிஎம்-இன் போராட்டத்திற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம்.

100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்ப தற்கான சுதந்திரப் போராட்ட த்தைத் தொடங்கிய இந்தியாவின் கம்யூனிஸ்டுகள், கடுமையான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு பெரும் விலையைக் கொடுத்தனர்.

அதே போல் இன்றும், மோடி அர சாங்கத்தின் தொழிலாளர் வர்க்க த்திற்கு எதிரான ஒடுக்குமுறை கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் பக்கபலமாக சிபிஎம் நிற்கிறது.

தொழிலாளர் வர்க்கத்திற் கான அரசியல் களத்தை மீட்டெ டுப்பதற்கும் விரிவாக்குவதற்கு மான போராட்டம் நீண்டதாக இருக்கும்.

ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகளின் முன்னேற்றப் பாதை முற்றிலும் முறிய டிக்கப்படாமல் தொடர்கிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.