தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்! துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

23 Sept 2026, 12:01 am
தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்! துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்! துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

உதகை, செப்.22-தேயிலை உற்பத்தியாளர்கள், இந்திய தேயிலைக்கு என தனி பிராண்ட் மற்றும் தொழிலாளர்கள் நலனின் அக்கரை செலுத்த வேண்டும் என குன்னூரில் நடந்த உபாசி நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்ட இந்திய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் உபாசி அரங்கில் உபாசி நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் முன்னிலை வகித்தார். குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து நூற்றாண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளர்களில் இந்தியா ஒன்றாக உள்ளது. இருந்த போதிலும், உற்பத்தி மட்டுமன்றி தரமான தயாரிப்பு, மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தலிலும் கவனம் செலுத்த வேண்டும்.

உலக சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கை சிறிய நாடாக இருந்தாலும், இந்திய தேயிலை வர்த்தகத்திற்கு கடும்போட்டியாக உள்ளது. எனவே, உற்பத்திச் செலவை குறைத்தல், தரத்தை மேம்படுத்தல், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் தோட்டக்காரர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடர்பாக உபாசி தனது ஆராய்ச்சி பணிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இந்திய தேயிலைத் துறை மொத்த விற்பனை வர்த்தகத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், சர்வதேச அளவில் அறியப்படும் வலுவான பிராண்டுகளை உருவாக்க முன்வர வேண்டும்.

பிராண்டிங் மூலம் அதிக மதிப்பும், உயர்ந்த விலையும், நிலையான சந்தையும் கிடைக்கும். மேலும், தேயிலை தொழிலில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும். நான்கு மாநிலங்களிலும் குறைந்தது ஒரு இடத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை வசதிகளுடன் கூடிய சுகாதார மையங்களை அமைக்க வேண்டும். தொழிலாளர் நலனும் தொழில் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று சார்ந்தவையாக இருத்தல் வேண்டும்.

தொழிலாளர்கள் இல்லையெனில் தொழில் இல்லை. தொழில் இல்லையெனில் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. இருவரது நலனும் இணைந்து வளர வேண்டும். தேயிலை வாரியம், வாணிப அமைச்சகம் உள்ளிட்ட ஒன்றிய அரசு அமைப்புகள் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. அதற்காக உபாசி மற்றும் தோட்டத் துறையினர் ஒருங்கிணைந்த, விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அரசுகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேயிலை உற்பத்தியில் இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களை கொண்டுள்ளது. மிகப்பெரிய நுகர்வு சந்தையையும் கொண்ட நாடாக உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய தேயிலையை உலக சந்தையில் முன்னணி இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.