மீண்டும் கொரோனா பரவல் : ஆந்திராவில் 4 பேர் உயிரிழப்பு
17 Jul 2026, 8:18 pm
<p><strong>மீண்டும் கொரோனா பரவல் : ஆந்திராவில் 4 பேர் உயிரிழப்பு</strong></p><p>உலக நாடுகளை உலுக்கியது போல, இந்தியாவிலும் 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் மிக மோச மான பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ஆம் ஆண்டு வரை மூன்று அலையாக விட்டு விட்டு 4,26,04,881 (4.2கோடி) பேருக்கு கொரோனா வைரஸ் அதீத பாதிப்பை ஏற்படுத்தியது. 5,33,849 பேர் உயிரிழந்த னர். ஆனால் இந்தியாவின் உண்மையான கொரோனா பலி எண்ணிக்கை 47 லட்சம் என உலக சுகாதார நிறுவனம் கூறியது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கும் அபாயம் ஏற்பட்டு ள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளதுடன், சிகிச்சை பெற்று வந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில சுகா தாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ஆந்திராவில் கொரோனா பாதிக்க ப்பட்ட 12 பேரில் கடப்பாவைச் சேர்ந்த 8 பேர், குண்டூரைச் சேர்ந்த 2 பேர், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடா வைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். 3 பேர் வீட்டு தனிமைப்படுத்தலிலும், 2 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதி களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொற்று வேகமாகப் பரவும் அபாயம் இல்லை. அதே சமயம் உயிரிழந்தவர்கள் அனை வரும் ஏற்கெனவே உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா புதிய வகை வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிய 5 மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப் பப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரா மட்டுமின்றி ஜூலை 1 முதல் நாடு முழுவதும் 339 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதே சமயம் ஆந்திர எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.</p>
