தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குற்றாலம் மேல வெண்ணமடை குளத்தில் படகு சவாரி துவக்கம்

10 Aug 2026, 12:12 am
குற்றாலம் மேல வெண்ணமடை  குளத்தில் படகு சவாரி துவக்கம்

குற்றாலம் மேல வெண்ணமடை குளத்தில் படகு சவாரி துவக்கம்

தென்காசி, ஆக.09-தென்காசி மாவட்டம், குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள மேல வெண்ணமடை குளத்தில் படகு சவாரி ஆகஸ்ட் 8 அன்று தொடங்கியது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், தென் தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் குற்றாலத்திற்கு அருவிகளில் குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்

விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்

துறை சார்பில் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள்ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. வழக்கமாக

சாரல் திருவிழா தொடங்கிய சில நாட்களில் படகு சவாரியும் தொடங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் சாரல் திருவிழா நிறைவடைந்த பின்னர் தற்போது படகு சவாரி தொடங்கப்பட்டுஉள்ளது.

குற்றாலம் – ஐந்தருவி சாலையில் உள்ள மேல வெண்ணமடை குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு

குழாமில் இரண்டு நபர்மிதி படகிற்கு 30 நிமிடங்களுக்கு ரூ.200, நான்கு நபர் மிதி படகிற்கு 30 நிமிடங்களுக்கு ரூ.300 கடணம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.

படகு சவாரி தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயம் பாதுகாப்புகவசம் அணிந்து சவாரி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றுதெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ந.நித்திய கல்யாணி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக

மண்டல மேலாளர் ஜோமேக்ஸ், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.