தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

13 Nov 2025, 3:30 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறையில் அடைப்பு

கோவை, நவ.13- கோவை மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்றுபேரில் ஒரு வர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பின் வியாழனன்று கோவை மத்திய சிறை யில் அடைத்தனர். கோவை விமான நிலையம் அருகே மாணவியை மூன்று  பேர் கடத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சதீஷ் என்கிற கருப்புசாமி, காளீஸ்வ ரன் மற்றும் குணா என்கிற தவசி, ஆகிய மூவரை போலீசார் சுட்டு பிடித்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரில் தவசி என்பவரை சிகிச்சைக்கு பின்  புதனன்று போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் காளீஸ்வரன்னையும் வியாழனன்று சிகிச் சைக்கு பின் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னாள், இந்நாள் ஆட்சியர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

கோவை, நவ.13- வட்டாட்சியர் பதவி உயர்வு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் தற்போதை ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் வருகிற 19 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் டி.என். பி.எஸ்.சி கடந்த 2029 - 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற வருவாய் உதவியாளராக கோவையில் பணி யில் சேர்ந்த உமாபதி, நாட்ராயன் ஆகியோர் துணை வட்டாட்சி யராக 2018 ஆம் ஆண்டும், சிறப்பு வட்டாட்சியராக 2022 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றனர். பின்னர், மீண்டும் துணை வட்டாட்சியராக இவர்கள் பதவி இறக்கம்  செய்யப்பட்டனர். இதை எதிர்த்து முறையிடப்பட் டது. அதே நேரம் உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.  இதற்கிடையில் முதலில் பிறப்பித்த சுற்றறிக்கை அரசு  திரும்ப பெற்றுள்ளது. இதையடுத்து தங்களுக்கு  மீண்டும் வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கக் கோரி  நீதிமன்றத்தில் இருவரும் முறையிட்டனர். இதனை நீதிமன்றம் ஏற்றது. ஆனால், இதன்பிறகு வெளியி டப்பட்ட வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் இவர்கள் பெயர் இல்லாத தால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை  மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இருவரும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே இளந்திரையன், கோவை ஆட்சியரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். அவர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமினில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன் புதனன்று விசாரணைக்கு வந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் ஆஜரா னார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன்  ஆஜராகி, கோவை மாவட்ட ஆட்சியராக கடந்த பிப்ரவரி  மாதம் தான் பவன் குமார் பதவியேற்றார். உயர்நீதி மன்ற உத்தரவின் போது கோவை ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அதி காரி கிராந்தி குமார் தான் பதவி வகித்தார், என்றார். இதை ஏற் றுக் கொண்டு நீதிபதி இந்த வழக்கை வருகிற 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்று கோவை மாவட்ட முன்னாள் ஆட்சி யர் கிராந்தி குமார், தற்போதைய ஆட்சியர் பவன் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

முருங்கைக்காய் விலை உயர்வு

பொள்ளாச்சி, நவ.13- பொள்ளாச்சி சுற்றுவட் டார பகுதிகளில் விவசாயி கள் அதிக அளவில் முருங் கைக்காய் பயிரிட்டு வருகின் றனர். தற்போது முருங்கைக் காய் விளைச்சல் குறைந்த தால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து  வகை மண்ணிலும் வளரக் கூடியது முருங்கை. வறட்சி யைத் தாங்கி வளரும் முருங்கை மரத்தில் குறைந்த நீரில் அதிக மகசூல் எடுக்க முடியும். பெரும்பான்மை யான விவசாயிகள் முருங் கைக்காய் விளைவித்து சந் தையில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர். தற்போது பொள்ளாச்சி பகுதியில் அடிக்கடி மழை செய்து வரு வதால், முருங்கை மரங்களி லுள்ள பூக்கள் பாதிக்கப் பட்டு உதிர்ந்து விடுகிறது. இதனால் விளைச்சல் குறைந்து தற்போது கிலோ  ரூ.100 வரை முருங்கைக் காய் விலை உயர்ந்து விட் டது. சராசரியாக ரூ.30 முதல்  40 ரூபாய் வரை விற்பனையா கும் முருங்கைக்காய், விளைச்சல் குறைந்துள்ள தால் தற்போது 100 ரூபாய் அளவுக்கு விலை உயர்ந் துள்ளது.

சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் படுகாயம்

உதகை, நவ.13- கூடலூர் அருகே அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையில் பயன்பாடில்லாத கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத் தில் 3 பெண்கள் படுகாயமடைந்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள நாடுகாணி, பொன்னூர் பகுதியில் அரசு  தோட்டக்கலைத்துறை பண்ணை செயல் பட்டு வருகிறது. இந்த பண்ணையில் தொழி லாளர்கள் வியாழனன்று வழக்கம் போல  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ணையில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடத்தின் பின்புறம் உள்ள களைச் செடிகளை வெட்டும் பணி ஈடுபட்டிருந்தனர். திடீரென கட்டிடத்தின் சுவர் இடிந்து பணி யில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது விழுந் துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த  மலர்விழி, காஞ்சனா, சந்திரமதி ஆகியோ ருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு, மேல்  சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவ மனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பினேன்’

ஈரோடு, நவ.13- -சக்திவேல்- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால், புற்றுநோய் அபாயத்திலிருந்து விவசாய தொழிலாளி விடுபட்டார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், ஊஞ்சலூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த  சண்முகவள்ளி. விவசாயத் தொழிலாளி யான இவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளி ஆவார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் விவசாயிகளை ஒருங்கி ணைத்து, அவர்களின் உரிமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தி, பல்வேறு போராட் டங்களை நடத்தும் களப்பணியாளரும் ஆவார். இந்நிலையில், சிவகிரியில் நடை பெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பங்கேற்க இவருக்கு அழைப்பு வந்துள் ளது. உடன் பணியாற்றும் தொழிலாளர்களு டன், இவரும் பங்கேற்றார். அனைத்து பிரிவு  மருத்துவர்களும் முகாமில் பங்கேற்றிருந்த னர். சாதாரண பரிசோதனைகள் முதல்  சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. முடிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவை யான ஆலோசனைகள், மருந்துகள் உள் ளிட்டவை அளிக்கப்பட்டன. மேற்சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய பரிந்துரைகள் செய்து தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பெண்களுக்கு தனியான மருத்துவர் கள் பணியமர்த்தப்பட்டு முகாம் நடைபெற்று வந்தது. ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைக ளின் முடிவில் சண்முகவள்ளிக்கு, கர்ப் பப்பை வாய் தொற்று இருப்பது கண்டறிய ப்பட்டது. அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள், ‘திடீர் என தலைவலி, மயக் கம் வந்திருக்குமே. தாங்க முடியாத அள விற்கு வந்திருக்குமே’ என்று கேட்டதற்கு ஆம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து உரிய பரிந்துரைகளுடன் மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து மருத்துவர் கள் அறிவுறுத்தலின் படி சிகிச்சை மேற் கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரி டம் விசாரித்த போது, நடந்த விபரங்களை பகிர்ந்து கொண்டார். இதன் அடுத்த கட் டம் அதாவது கருப்பை தொற்றின் அடுத்த கட்டம் புற்றுநோயாகும் என்பது மருத்துவர் கள் கூறினர். இதன் அபாயம் சாதாரண விவ சாயத் தொழிலாளர்களுக்கு தெரிவதில்லை. தங்கள் உடல் நலன் குறித்த விழிப்புணர்வு பெரிதாக கிராமப்புற மக்களுக்கு இல்லை. இந்நிலையில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தியுள்ளது சிறப்பானது. இதன் மூலம் புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பி னேன், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.