வாலிபர் சங்க நிர்வாகிகள் மீதான பொய் வழக்கு அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு
10 Apr 2026, 5:30 am

வாலிபர் சங்க நிர்வாகிகள் மீதான பொய் வழக்கு அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு

சேலம், ஏப். 9- வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது ரயில்வே போலீசார்தொடர்ந்த வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்னக ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கடந்த 2018 பிப்ரவரி மாதம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேலம் ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, சேலம் மாவட்டச் செயலாளர் என்.பிர வீன்குமார் மற்றும் திருப்பூர் செயலாளர் மணிகண்டன், ஈரோடு செயலாளர் சரவணன், தருமபுரி செயலாளர் ஏ.ஜெகன் ஆகி யோர் மீது ரயில்வே போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சேலம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், வியாழனன்று நீதிபதி நிர்மலா அளித்த தீர்ப்பில், வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அனை வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் வாலிபர் சங்க நிர்வாகிகளுக்காக கட்டண மில்லாமல் திராவிட வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஏ.செல்வம் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த ஜூனியர் வழக்கறிஞர் சரவ வதி உள்ளிட்ட பெண் வழக்கறிஞர்களுக்கு வாலிபர் சங்க நிர் வாகிகள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.