சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்</strong></p>
<p>மயிலாடுதுறை, நவ.12 - மயிலாடுதுறையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகமான தோழர் கோ.பாரதிமோகன் நினைவகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி தங்களை மார்க்சிஸ்ட் கட்சி யில் இணைத்துக் கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளலாம் என மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்த ஓரிரு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதி மறுப்பு திருமணங்கள் தமிழ்நாடு முழு வதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவல கத்தில் நடைபெற்றுள்ளன. அத்தோடு, சாதி, மதங்களை கடந்து திருமணம் செய்து கொண்டவர்களை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகே யுள்ள மாப்படுகை பகுதியைச் சேர்ந்த சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சந்துரு- கீர்த்திகா தம்பதி புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு அலுவலகத்திற்கு வந்து, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்து கொண்ட னர். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாநிலக் குழு உறுப்பினர் சிங்காரவேலன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.</p>
