தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

27 Mar 2026, 3:15 pm
திருச்சி விரைவு செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2.51 லட்சம் பறிமுதல்

இராமநாதபுரம்,மார்ச் 27- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதையொட்டி, தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு நான்கு தொகுதியிலும் கண்காணிப்பு பணிகளில் இருந்து வருகின்றன. அதன் அடிப்படையில் மார்ச் 27 அன்று  தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு வாகனத்தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் ரூ.1,28,500, திருவாடானை சட்டமன்ற தொகுதியில் ரூ.72,000, மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.51,000  என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய்  உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததை நிலை யான கண்காணிப்பு குழு கண்டறிந்து பணத்தை கைப்பற்றினர்.இதனை கருவூலத்தில் ஒப்படைத்ததுடன், உரிய ஆவணத்தை வழங்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

தவறவிட்ட 18 பவுன் நகையை  உரியவரிடம் ஒப்படைத்த தம்பதி

சிவகங்கை,மார்ச் 27- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த காஞ்சனா தேவி என்பவர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக தேவகோட்டைக்கு சென்றிருந்தார். அப்போது தேவகோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தனது 18 பவுன் தாலி தங்கச் சங்கிலியை தவறவிட்டார். இந்நிலையில் அந்த பகுதியில் வந்த பிரதீப் குமார் – பிரதிகா தம்பதி  கீழே கிடந்த தங்கச் சங்கிலியை கண்டெடுத்தனர். இதனை தேவகோட்டை காவல் நிலையத்திற்குச் சென்று ஒப்படைத்தனர். நகர காவல் நிலையத்தில் அதிகாரிகள் முன்னிலை யில்  காஞ்சனா தேவியிடம் தாலிச்செயின் ஒப்படைக் கப்பட்டது. அவர்களது நேர்மையான செயலை பாராட்ட சால்வை அணிவிக்க முயன்றபோது, “கிடைத்ததை ஒப்ப டைக்க வந்தோம். இதற்கு பாராட்டு தேவையில்லை” என்று தம்பதியர் பணிவுடன் மறுத்தனர்.  தனது நகையை மீண்டும் பெற்ற காஞ்சனா தேவி, கண்ணீர் மல்க கைகூப்பி அந்த தம்பதியருக்கு நன்றியை தெரி வித்தார்.

சிவகாசி அருகே சாலை விபத்தில் பெயிண்டர் பலி

சிவகாசி,மார்ச் 27-                                   சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் பெயிண்டர் உயிரிழந்தார். விருதுநகர் அருகேயுள்ள சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் (23).பெயிண்டராக வேலை செய்துவந்தார். சம்பவத்தன்று மாலையில் வேலை முடிந்து இராமர் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருத்தங்கல் புதிய பேருந்து நிலையம் முன்பு வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது.  இதில் வீரபாண்டி யன் பலத்தக் காயமடைந்தார். அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியி லேயே  உயிரிழந்தார்.  சிவகாசி அரசு மருத்துவமனை யில் ராமர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோதமாக மது, குட்கா  விற்ற 3 பேர் கைது

இராஜபாளையம், மார்ச் 27- இராஜபாளையம் தெற்கு காவல்துறையினர்  மலையடிப்பட்டி பகுதியில் ரோந்துசென்றனர்.அப்போது மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவலிங்காபுரம் பகுதியை சேர்ந்த வீரமணி(36) என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்த  53 மது பாட்டில்கள் கைப்பற்றினர். மேலும் ரயில் நிலையம் அருகே கூரைப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காளிமுத்து(67) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 131 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக மது விற்ற இருவரையும் கைது செய்தனர். லட்சுமியாபுரம் பகுதியில் பாண்டியராஜன்(41) என்பவரை பிடித்து அவரிடமிருந்த சுமார் 18 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பறக்கும் படையினரால் பறிமுதல் செய்த பணம்-பொருட்களை உரிய ஆவணங்களை  சமர்ப்பித்துத் திரும்பப்பெற குழு அமைப்பு

விருதுநகர், மார்ச் 27- தேர்தல் பறக்கும் படை யினரால் பறிமுதல் செய்த  பணம்  மற்றும் பொருட்க ளைத் திரும்பப் பெற மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலு வலர்- மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா   தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தலை யொட்டி  மாவட்டம் முழுவ தும் தேர்தல் நடத்தை விதி கள் அமலில் உள்ளன. இதன்படி, உரிய ஆவணங்க ளின்றி ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணமோ அல்லது 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள பொருட்களையோ கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவ் வாறு கொண்டு செல்லும் போது தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளில் பறி முதல் செய்யப்படும். அவ்வாறு கைப்பற்றப்படும் தொகை மற்றும் இதர பொ ருட்களை உரிய ஆவணங்க ளைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெறுவதற்காக, “மாவட்ட குறைதீர்க்கும் குழு / கைப் பற்றுகை விடுவிக்கும் குழு”  அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தகுந்த ஆதா ரங்களைச் சமர்ப்பித்து, இக்குழுவின் தலைவரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையி டம்  திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வீ.கேசவதாசன்,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருது நகர். கைபேசி எண்: 7373704226, ஏ.வெங்க டேஷ்வரன், மாவட்ட கருவூல அலுவ லர், விருதுநகர். கைபேசி எண்: 9095315660. எஸ்.விசாலாட்சி, கணக்கு அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர். கைபேசி எண்: 9677527120 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.