கவுன்சிலர் கணவருக்கு அரிவாள் வெட்டு: ரூ.6 லட்சம் நிவாரணம்
29 Sept 2026, 11:16 pm

கவுன்சிலர் கணவருக்கு அரிவாள் வெட்டு: ரூ.6 லட்சம் நிவாரணம்

கோவை, செப்.29-ஆனைமலை பகுதியில் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த பட்டியலினத்தை சேர்ந்த முருகன் என்பவரது குடும்பத்தினருக்கு, அரசு சார்பில் முழு நிவாரணத் தொகையான ரூ.6 லட்சத்தை அமைச்சர்கள் வழங்கினர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அருகிலுள்ள ஓடையக்குளம் பகுதியில் டெங்கு கொசு மருந்து தெளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், உள்ளூர் ஊராட்சி உறுப்பினரின் கணவரான முருகன் என்பவர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்து கை துண்டிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகனுக்கு, மருத்துவர்கள் குழு 8 மணி நேர தீவிர அறுவை சிகிச்சை மேற்கொண்டு கையை வெற்றிகரமாகச் சரிசெய்துள்ளனர்.தற்போது அவருக்கு கையில் உணர்ச்சி திரும்பியுள்ள நிலையில், தொடர்ந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆகியோர் செவ்வாயன்று முருகனை சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.6 லட்சத்தை உடனடியாக வழங்கினர்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் வன்னியரசு கூறும் போது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) வழக்கமாக 25 சதவீத நிவாரணத் தொகையே முதற்கட்டமாக வழங்கப்படும் என்ற போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக முழுப் பயனும் சேர வேண்டும் என்ற நோக்கில் ரூ.6 லட்சம் முழு நிவாரணத் தொகையும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த மறுநாளே குற்றவாளிகள் அனைவரும்கைது செய்யப்பட்டு, பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர்கள் இணைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகையில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.மேலும், சேலம் பாராமெடிக்கல் கல்லூரியில் பட்டியல் சமூக மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்துப் பேசிய அமைச்சர்கள், உடனடி நடவடிக்கை மூலம் அம்மாணவிகள் அனைவரும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு மாணவியின் கல்வியும் இடைநிற்காத வண்ணம் அரசு உறுதியாக செயல்படும் என்றும் தெரிவித்தனர்.