தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியாரால் மிக மோசமாக சுகாதாரப் பணிகள் விருதுநகர் நகராட்சித் தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

30 Jan 2026, 5:56 pm
தனியாரால் மிக மோசமாக சுகாதாரப் பணிகள் விருதுநகர் நகராட்சித்  தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
<p><strong>தனியாரால் மிக மோசமாக சுகாதாரப் பணிகள் விருதுநகர் நகராட்சித் &nbsp;தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்</strong></p> <p>விருதுநகர், ஜன.30- விருதுநகரில் தனியார் நிறுவனம் மூலம் குப்பை சேகரிக்கும் பணிகள் மிகவும் மோசமாக நடைபெறுவதாக குற்றம்சாட்டி நகர்மன்றத் தலைவரை முற்றுகையிட்டு கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் நகராட்சியில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலை வர் ஆர்.மாதவன் தலைமையில் நடை பெற்றது. பொறியாளர் பிரபாகரன், துணைத் தலைவர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு : வெறிநாய் கடித்ததில் தங்களது வார்டு பகுதியினர் &nbsp;பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தாக உறுப்பினர்கள் மிக்கேல்ராஜ் உள்ளிட்டோர் புகார் தெரிவித்தனர். அரசு உத்தரவின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர் பதில் தெரிவித்தார். மேலும், தெரு நாய்களை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். கருத்தடை செய்வதற்கான இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது என தலைவர் பதில் கூறினார். அனைத்து வார்டுகளிலும் குப்பை வாங்கும் பணிகள் சரியாக நடைபெற வில்லை. தள்ளு வண்டி மூலம் குப்பை &nbsp;வாங்குகின்றனர். இதனால் பாதியள விற்கும் &nbsp;மேற்பட்ட வீடுகளில் குப்பைகள் வாங்காமல் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, &nbsp;குப்பைகளை ஆற்றுப் பகுதிக ளிலும் சாலையோரங்களிலும் பொது மக்கள் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மாதந்தோறும் அனைத்து வீடுகளி லும் குப்பைகளை வாங்கியதாக தனியார் நிறுவனத்தினர் கணக்கு எழுதி பணம் பெற்று விடுகின்றனர் &nbsp;என உறுப்பினர்கள் ஜெயக்குமார், முத்துராமன், ராஜ்குமார் ஆகியோர் நகர்மன்றத் தலைவரை முற்று கையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். பொது மக்கள் &nbsp;மத்தியில் அவப்பெயர் சுகாதாரப் பணிகள் நன்றாக நடைபெற்ற விருதுநகரில் தனியார் &nbsp; நிறுவனத்தால் நமது நகராட்சிக்கு பொது மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என உறுப்பினர் மதியழகன் தெரிவித்தார். இதையடுத்து பேசிய தலைவர், &nbsp;தனியார் நிறுவனம் பணிகள் முடித்து &nbsp;பெற்ற பணம் குறித்து ஆய்வு செய்யப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். தனது வார்டு பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. ஆனால், மண் அள்ள வில்லை,சாலையை சீரமைக்கவில்லை. இதற்கு காரணமான ஒப்பந்தகாரரை நகர்மன்றத்திற்கு வரவழைக்க வேண்டு மென உறுப்பினர் ஆறுமுகம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தலைவர் மற்றும் பொறியாளர் நிறுவனத்தின் மேற்பார்வை யாளரை அங்கு வர வழைத்தனர். பின்பு, அனைத்து பணிகளையும் முடித்து தரு வதாக நிறுவன ஊழியர் உறுதியளித்தார். கடந்த ஆண்டு தனியார் பொ ருட்காட்சி கட்டணம் மற்றும் அங்கு ராட்டி னத்தின் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ராட்டி னத்தில் இருந்து பெண் ஒருவர் விழுந்து விபத்தும் ஏற்பட்டது. அதை சரி செய்ய வேண்டும். பொருட்காட்சியை &nbsp;ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணம் வசூலிக்க நடவடிக்கை வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் ஜெயக்குமார், முத்துலட்சுமி, மிக்கேல் ராஜ் ஆகியோர் &nbsp; தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் கூறினார். சமுதாயக் கூடத்திற்கு வாடகை நிர்ண யம் மற்றும் பராமரிப்பது குறித்த தீர்மா னத்தின் போது, சமுதாயக் கூடம் நக ராட்சியின் பொறுப்பில் இருக்க வேண்டும். வாடகை ரூ.3 ஆயிரம் மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடங்கள், வாக்குப் பெட்டி அறை, தனி யார் குடோன், மருந்து பெட்டக அறை யாக செயல்படுகிறது. அதை நகராட்சி வசம் கொண்டு வந்து பொது மக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர வேண்டுமென உறுப்பினர்கள் &nbsp;சரவணன், ஜெயக்குமார், பேபி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அனைவருக்கும் அறிவிப்பாணை அனுப்பி நகராட்சி வசம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார். தாமிரபரணி குடிநீர் உப்பு நீர் கலந்து வருகிறது என உறுப்பினர் பாத்திமுத்து தெரிவித்தார். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படும் என பொறியாளர் தெரிவித்தார். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.