தில்லியில் 2 நாட்கள் கூட தங்க முடியவில்லை : காற்று மாசுபாட்டின் தாக்கத்தை ஒப்புக்கொண்ட ஒன்றிய அமைச்சர்
26 Dec 2025, 3:44 pm
<p><strong>தில்லியில் 2 நாட்கள் கூட தங்க முடியவில்லை : காற்று மாசுபாட்டின் தாக்கத்தை ஒப்புக்கொண்ட ஒன்றிய அமைச்சர்</strong></p>
<p>புதுதில்லி நாட்டின் தலைநகர் தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த 2 மாத காலமாக காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளாக சரிந்து இருப்ப தால், மக்கள் மூச்சு விட முடியாமல் திணறி வருகின்றனர். முக்கியமாக காற்று மாசு பாட்டால் சுவாச நோயாளிகள், நுரையீரல் தொற்று போன்ற நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தில்லி மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளை பரி சோதிக்கும் மருத்துவர்கள் தில்லியை விட்டு வெளியேற பரிந்துரை செய்கின்றனர். காற்று மாசைக் கண்டித்தும் தூய்மையான காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யக் கோரி மக்கள் நடத்தும் போராட்டத்தை ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் தடியடியுடன் ஒடுக்குகின்றன. குறிப்பாக காற்றின் தரக் குறியீடு புள்ளிகளை முறைகேடாக குறைக்கப் படுகின்றன. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் கள், பாஜக எம்.பி.,க்கள், எம்எல்ஏ-க்கள் காற்று மாசுவை தெளிப்பான்கள் மூலம் தங்களை பாது காத்துக் கொள்கின்றனர். ஆனால் தில்லி மக்கள் மூச்சுத் திணறலுடன் அல்லாடுகின்றனர். இந்நிலையில், தில்லியில் 2 நாட்கள் மட்டுமே தங்கினாலும், அதீத காற்று மாசு காரண மாக, எனக்கு நோய்த் தொற்றுகள் வந்துவிடு கின்றன என ஒன்றிய சாலைப் போக்குவரத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புக்கொண்டுள் ளார். தில்லியில் நடைபெற்ற புத்தக வெளி யீட்டு விழா ஒன்றில் அவர் மேலும் கூறுகை யில், “நான் தில்லிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கினாலே எனக்குத் தொற்று ஏற்பட்டு விடு கிறது. அந்த அளவிற்கு இங்கே காற்று மாசு அபா யகரமாக உள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் என்ற முறையில் நானே இதை ஒப்புக் கொள்கிறேன். தில்லியின் காற்று மாசுபாட்டில் 40% வாகனப் புகையால்தான் ஏற்படுகிறது. நாட்டின் இறக்குமதியைக் குறைப்பதே உண்மையான தேசியவாதம். இந்தியா ஆண்டு தோறும் சுமார் ரூ.22 லட்சம் கோடி மதிப்பி லான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இவ்வளவு பணம் செலவழித்து, நமது சொந்த நாட்டையே நாம் மாசுபடுத்து கிறோம். இது என்ன மாதிரியான தேசியவாதம்? இதற்குப் பதில் உயிரி எரிபொருட்களை பயன் படுத்தி நாம் ஏன் சுயசார்பு இந்தியா உருவாக்க கூடாது?” என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, 2 வாரத்திற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் காற்று மாசு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஒன்றிய சுற்றுச் சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர்,”நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மோச மாக இருந்தாலும், காற்று மாசுபாட்டால் மட்டுமே மரணங்கள் அல்லது நோய்கள் ஏற்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த நேரடித் தரவுகள் (Conclusive Data) இல்லை” என தனித்தனியாக விளக்கம் அளித்தனர். இத்தகைய சூழலில், தற்போது தில்லியில் 2 நாட்கள் கூட தங்க முடியவில்லை, நோய்த் தொற்றுகள் வந்துவிடுகின்றன என காற்று மாசுபாட்டின் தாக்கத்தை ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புக்கொண்டுள் ளார். இதன்மூலம் தில்லி மக்கள் காற்று மாசு பாட்டில் சிக்கி திணறி வருவதை மோடி அரசு நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளது.</p>
