தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழ்க்கைச் செலவு உயர்வும் பணவீக்கத்தின் சமமற்ற சுமையும் -சஞ்சய் ராய்

29 Oct 2026, 9:25 pm
வாழ்க்கைச் செலவு உயர்வும்  பணவீக்கத்தின் சமமற்ற சுமையும் -சஞ்சய் ராய்

வாழ்க்கைச் செலவு உயர்வும் பணவீக்கத்தின் சமமற்ற சுமையும் -சஞ்சய் ராய்

தற்போதைய அரசின் அரசியல் நெருக்கடி, தனது கூட்டாளிகள் மூலம் தேர்தல் முறையைக் கைப்பற்றியது அம்பலமானதால் ஏற்பட்ட நியாயத்தன்மைப் பற்றாக்குறையிலிருந்து உருவானது. அடுத்து பொருளாதார நெருக்கடியும் தீவிரமாக தொடர வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயரும் என்பதை ஆட்சியில் இருப்பவர்களே சுட்டிக்காட்டியுள்ளனர். அதிகாரத்தைத் தக்கவைப்பதில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டு, அதிகாரம் ஆழமாக அரிக்கப்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசு பணவீக்க அழுத்தங்கள் குறித்து அபாய மணி அடிக்கிறது. எனவே விலைவாசி உயர்வுடன் வேலையின்மையும் அதிகரிக்கும்; வயிற்றை இறுக்கிக் கட்டும் நிலைக்கு முன்னறிவிப்பு தேவையில்லை.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய குடும்பக் கணக்கெடுப்பு, விலைவாசி 10% உயரும் என்ற எதிர்பார்ப்பைக் காட்டுகிறது. இது பெரும்பாலும் எரிசக்தி விலை, குறிப்பாக டீசல் விலை உயர்வால் நிகழும்; பெரும்பாலான பொருட்கள் சாலை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

அமெரிக்க அரசு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100% வரி என்று சட்டம் இயற்றியுள்ளது. இந்தியாவைத் தவிர ரஷ்யாவிலிருந்து எரிவாயு வாங்கும் பல ஐரோப்பிய நாடுகளும் உள்ளன; இந்திய இறக்குமதியால்தான் ரஷ்யா உக்ரைன் போருக்கு நிதி திரட்டுகிறது என்பதும் இல்லை. தனிப்பட்ட உறவுகள் மூலம் மோதல்களைப் பொருளாதார நட்பாக மாற்றலாம் என்று இந்தியத் தலைவர்கள் எண்ணினாலும், அமெரிக்க நெருக்குதல் தொடர்கிறது. அமெரிக்கக் குடிமக்களின் வேலைகளைப் பறிப்பதாகக் கூறி, இந்திய மென்பொருள், ஐடி நிறுவனங்களிடமிருந்து இறக்குமதியையும் அமெரிக்கா கட்டுப்படுத்தியுள்ளது. சரக்கு வர்த்தக இடைவெளி அதிகரித்தபோதும், சேவை ஏற்றுமதியால்தான் இந்தியா வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதியையே பெரிதும் சார்ந்திருப்பதால், இனி அது கடினமாகும்.

பணவீக்கத்தை உந்தும் உலகக் காரணிகள்

ரஷ்ய எண்ணெய் உள்கட்டமைப்பின் மீதான உக்ரைனின் சமீபத்திய தாக்குதல்கள் விநியோகத்தைச் சீர்குலைத்து டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காகப் பிற நாடுகளை மிரட்டும் அமெரிக்கா, அதே நேரம் தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனையும் எச்சரிக்கிறது; ஏனெனில் அமெரிக்கா டீசலை இறக்குமதி செய்கிறது; விநியோகத் தடைகள் டீசல் விலையை ஏற்றியுள்ளன. அமெரிக்க விவசாயிகளும் இதனால் மகிழ்ச்சியடையவில்லை; உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. பாரசீக வளைகுடாவில் அரசியல் கொந்தளிப்பு, அமெரிக்காவின் ஈரான் ஆக்கிரமிப்பு, ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி, உரம் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத் தடைகளும் விரைவில் பணவீக்க அழுத்தங்களை உருவாக்கும். எரிசக்தி, உர விலை உயர்வு போக்குவரத்துச் செலவு வழியாக உணவுப் பணவீக்கத்தை அதிகரித்து, பயனுள்ள தேவையை மேலும் சுருக்கும்.

அக்டோபர் 2026 உலக வர்த்தக அமைப்பின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி, செயற்கை நுண்ணறிவின் மீதான அதிக வருமான எதிர்பார்ப்புகள் குறைக்கடத்திகள், தரவு மையங்கள், மின் உற்பத்தி, கிரிட் இணைப்புகள், குளிரூட்டும் அமைப்புகளில் பெரும் முதலீடுகளுக்கு வழிவகுத்துள்ளன. பரந்த உற்பத்தித்திறன் ஆதாயம் கிடைக்கும் முன்பே, மூலதனப் பொருட்கள், கட்டுமானச் சேவைகள், நிலம், ஆற்றல், திறன்மிகு உழைப்புக்கான தேவை உயர்ந்து, முழுத் திறனுடன் இயங்கும் பொருளாதாரங்களில் பணவீக்கத்தை உருவாக்குகிறது. ஹோர்முஸ் மோதலால் எரிசக்தி பொருட்களின் போக்குவரத்துத் தடம் மாற்றப்பட்டாலும், செங்கடல், கருங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் எரிபொருட்களின் விலையை உயர்த்துகிறது. அதிக லாப எதிர்பார்ப்புடன் கூடிய முதலீடுகள், எரிசக்தி போக்குவரத்து தடங்களை மறுவழிப்படுத்துதல், வர்த்தகத்தைப் பன்முகப்படுத்துதல் உற்பத்தியில் எரிசக்தி பயன்பாட்டின் தீவிரத்தைக் குறைத்தல் ஆகியவற்றால் உலகப் பொருளாதாரத்தின் மீள்தன்மை கூடியுள்ளது உண்மையே; ஆனால் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பும் மிகுந்த எரிசக்தி தேவையுடையது; எரிசக்தி விலை உயர்வு தொழில்நுட்ப வழியாகவும் பொருளாதாரம் முழுவதும் பரவுகிறது. போரழிவு, ராணுவச் செலவு, விநியோகத் தடைகள், எரிசக்தி விலைகள் ஆகியவை தனியார், பொதுக் கடனையும் வட்டி விகிதங்களையும் உயர்த்துகின்றன. பணவீக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட பழமைவாதப் பணவியல் கொள்கைகளால், வளர்ந்த நாடுகளின் வட்டி உயர்வு வளரும் நாடுகளுக்கும் பரவி, கிராக்கியை மீண்டும் ஒருமுறை முடக்குகிறது.

2026இல் உலகப் பணவீக்கம் 4.7% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது பெரும்பாலும் எரிசக்தி, உணவு விலைகளால் இயக்கப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா மற்றும் பாரசீக வளைகுடா மோதல்கள் நீடித்தால் எரிசக்தி விலை உடனடியாக மட்டுமின்றி நீண்ட காலமும் உயரும்; மோதல்கள் நீடித்தால் எண்ணெய் விலையில் நீண்டகால மேல்நோக்கிய திருத்தம் ஏற்படும். இப்போதுவரை எதிர்கால ஒப்பந்த விலைகளை விட ஸ்பாட் விலைகள் அதிகமாக உள்ளன; இது, மோதல்கள் தற்காலிகமானவை என்றே சந்தை கருதுகிறது என்பதைக் காட்டுகிறது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு இருப்புக் குறைவாக உள்ளதால், குளிர்காலத் தேவை அதிகரிக்கும்போது விலைகள் உயரும். புவிசார் அரசியல் மோதல்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் மீது சைபர் தாக்குதல்களையும், நிதிச் சந்தை இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடும். வெள்ளம், வறட்சி, நீர்ப் பற்றாக்குறை போன்ற தீவிர வானிலையை நடப்பு எல் நினோ மோசமாக்கி, பண்ட விலைகள், போக்குவரத்து, உரத் தேவையைப் பாதிக்கக்கூடும்.

இந்தியாவின் எதிர்பார்ப்புகள்

செப்டம்பர் 2026 ரிசர்வ் வங்கிக் கணக்கெடுப்பின்படி, குடும்பங்களின் சராசரிப் பணவீக்க எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கு 70 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 9.9% ஆகவும், ஓராண்டுக்கு 60 புள்ளிகள் உயர்ந்து 10% ஆகவும் உள்ளது. 81.9% மக்கள் பொதுவாக விலைகள் உயரும் என்றும், 84.9% மக்கள் உணவுப் பொருட்களின் விலையும், 79.4% மக்கள் உணவல்லாப் பொருட்களின் விலையும் உயரும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

சமமற்ற சுமை

உணவு, வீடு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை, பிற பண்டங்களையும் பெயரளவு ஊதிய வளர்ச்சியையும் விட அதிகமாக உயர்வதே வாழ்க்கைச் செலவு நெருக்கடி. இது ஏழைகளை மிக மோசமாகப் பாதிக்கிறது; ஏனெனில், முதலாவதாக, இவற்றுக்கான தேவை நெகிழ்வற்றது, தவிர்க்க முடியாதது. இரண்டாவதாக, ஏழைகளின் நுகர்வுக் கூடையில் இவற்றின் பங்கு பணக்காரர்களை விட மிகப் பெரிது. எனவே நெருக்கடிக் காலத்தில் பணவீக்க சமத்துவமின்மை அதிகரிக்கிறது; வறுமைக் கோட்டுக்குச் சற்று மேலுள்ளவர்கள் மீண்டும் கீழே தள்ளப்படலாம்.

வளரும் நாடுகளின் தொழிலாளர் சந்தையில் மற்றொரு கட்டமைப்புக் காரணியும் உண்டு. உள்ளீட்டு விலை உயரும்போது, முதலாளிகளாக உள்ள உற்பத்தியாளர்கள் முழுச் சுமையையும் இறுதி விலையில் நுகர்வோர் மீது திணிக்கின்றனர். தொழிலாளர்கள் அதிக ஊதியம் கோரலாம்; வெற்றி, அவர்களின் பேரம் பேசும் வலிமையையும் கூட்டுப் பேரத்துக்கான சங்க அமைப்பையும் பொறுத்தது. அமைப்புசார் உற்பத்தி, சேவைத் துறைத் தொழிலாளரில் சிறு பகுதியினரும், வெள்ளைச் சட்டை ஊழியரில் ஒரு சிறு சிறுபான்மையினரும் மட்டுமே பஞ்சப்படி மூலம் ஓரளவு பாதுகாப்புப் பெறுகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை; அவர்களே விலை உயர்வின் சுமையை விகிதாச்சாரமின்றிச் சுமந்து, குறைந்த உண்மை வருமானத்தில் வாழ்வர். மறுபுறம், பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட பணவியல் கொள்கை வட்டியை உயர்த்தி, உள்நாட்டுத் தேவையையும் வேலைவாய்ப்பையும் பாதிக்கிறது; நிதியாளர்களுக்கோ அது அதிக வருமானம் தருகிறது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அக்டோபர் 25

தமிழில் சுருக்கம் : பெரணமல்லூர் சேகரன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.