தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரோ ஹெல்த் நிறுவனத்தில் 900 பேர் பணிநீக்கம் கேரளத்தில் அமெரிக்க நிறுவனம் அடாவடி

10 Jul 2026, 8:01 pm
கேரோ ஹெல்த் நிறுவனத்தில் 900 பேர் பணிநீக்கம் கேரளத்தில் அமெரிக்க நிறுவனம் அடாவடி

கேரோ ஹெல்த் நிறுவனத்தில் 900 பேர் பணிநீக்கம் கேரளத்தில் அமெரிக்க நிறுவனம் அடாவடி

ஊழியர்களின் போராட்டத்திற்கு வாலிபர் சங்கமும் ஆதரவு

கொச்சி அமெரிக்க பன்னாட்டு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான கேரோ ஹெல்த் (CorroHealth) கேரள மாநிலம் கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் திடீரென தனது 2 கிளைகளிலும் (கொச்சி, கோழிக் கோடு) உள்ள 900 மருத்துவக் ‘கோடிங் பணியில்’ இருந்த ஊழி யர்களை எவ்வித முன்னறிவிப்பு மின்றி பணிநீக்கம்செய்தது. இதுதொடர்பாக அந்நிறு வனம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “நிறுவனத்தை மூடுவதால் ஊழியர்களை பணிநீக்கம் செய் தோம்; ஜூலை 10 வரை ஊழியர் களை அலுவலகத்திற்குள் அனு மதிப்போம்” என கேரோ ஹெல்த் நிர்வாகம் விளக்கம் அளித்தது. ஆனாலும் ஜூலை 7 முதலே ஊழி யர்களுக்கு அலுவலக நுழைவு மறுக்கப்பட்டது. இதனால் வேலை யிழந்த சுமார் 900 தொழிலாளர்கள் அலுவலக வாயிலில் போராட்டம் நடத்தினர். ஊழியர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு ஆதரவை வழங்கி களத்தில் இறங்கின. மேலும் கேரோ ஹெல்த் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், கேரோ ஹெல்த் ஊழியர்கள் போராட்டத்திற்கு இந் திய ஜனநாயக வாலிபர் சங்கமும் (DYFI) ஆதரவு வழங்குவதாக அறி வித்து, போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக வாலிபர் சங்க மத்தியக்குழு வெளியிட்ட அறிக்கையில், “அமெ ரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறு வனமான கேரோ ஹெல்த் கேர ளத்தில் தனது செயல்பாடுகளை திடீரென நிறுத்தியதால், அங்கு பணிபுரிந்து வந்த 900 தொழி லாளர்கள் வேலையிழந்து தவிக்கி ன்றனர். எந்தவித முன்னறிவிப்பு மின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்கவும், நீதிக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஊழியர்களின் போராட்ட த்திற்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கமும் களத்தில் இறங்கி யுள்ளது. தொழிலாளர்களின் கண்ணியத்தையும், வாழ்வா தாரத்தையும் காக்க, பாதிக்கப் பட்ட ஊழியர்களுடன் தோளோடு தோள் நின்று வாலிபர் சங்க தோழர்கள் போராட்டத்தை முன் னெடுத்து வருகின்றனர். கேரோ ஹெல்த் ஊழியர் பணி நீக்க அடாவடி சம்பவம், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள கார்ப்ப ரேட் சார்பு தொழிலாளர் சட்டங் களின் ஆபத்தான விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளை வலுவிழக்கச் செய்யும் இத்தகைய சட்டங்களால், பன்னாட்டு நிறு வனங்கள் ஊழியர்களை எவ்வித பொறுப்புணர்வுமின்றி “தூக்கி எறியக்கூடிய பொருளாக” கருதும் சூழல் உருவாகியுள்ளது. தொழி லாளர் உரிமைகளை காப்போம், தொழிலாளர் விரோதக் கொள்கை களை முறியடிப்போம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கேரோ ஹெல்த் நிறுவனம் கேரளாவிலிருந்து வெளியேறும் முடிவை நிறுத்தி வைக்க, எர்ணாகுளம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கேரோ ஹெல்த் நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத்.”தொழில்துறை உறவுகள் சட்டம் 2020 (Industrial Relations Code 2020) விதிகளின்படி இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று ஜூலை 8 அன்று உத்தரவிட்டுள்ளார். தற்போது நீதிமன்றத்தின் தலையீடு, கேரோ ஹெல்த் நிறுவனத்தில் சிபிஎம் மற்றும் கேரள அரசின் பேச்சுவார்த்தை முயற்சி, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. ஜூலை 10ஆம் தேதி இரவு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டம் கூடுகிறது. இதில் சிபிஎம், சிஐடியு வைத்துள்ள கோரிக்கைக்கு ஏற்ப தொழிலா ளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் தொடர்பாக உறுதியான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.