டிச.8-இல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
22 Nov 2025, 4:09 pm

டிச.8-இல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

சிஐடியு சம்மேளனக் குழு முடிவு

விருதுநகர், நவ.22 - தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி களில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடு வது என சிஐடியு- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் கள் சம்மேளனக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் அச்சங்கத்தின் சம்மேளனக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை யில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், மாநிலப் பொருளாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநில துணை பொதுச் செய லாளர் வி.குமார் விளக்கிப் பேசினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: 10 ஆண்டுகளுக்கு மேல் தூய்மைப் பணி, தூய்மை காவலர், குடிநீர் பிரிவு தொழிலாளர்களாக பணிபுரிவோரை நிரந்தரப்படுத்த வேண்டும். தமிழக அரசு, நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளை தனியாரிடம் வழங்கும் அரசாணை 152, 139 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 2(டி), 62 இன்படி குறைந்தபட்சக் கூலியை வழங்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் அதன் விதிகளை 2023-இல் திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். 2000 மே 10-க்குப் பின் ஊராட்சி களில் புதிய நியமனம் கூடாது என பிறப்பித்த தடையாணையை ரத்து செய்திட வேண்டும். காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். ஓ.எச்.டி ஆபரேட்டர்கள், தூய்மைக் காவலர் களுக்கு ஓய்வூதியம் மற்றும் சர்வீஸ் தொகையை வழங்க வேண்டும். கொரோனா தொற்று காலங்களில் முன்களப் பணியாளர்களாக பணி செய்த உள்ளாட்சித் துறை ஊழியர் களுக்கு அறிவிக்கப்பட்ட அரசாணை யின்படி ரூ.15 ஆயிரம் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி டிச.8-இல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகங்கள் முன்பு வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட் டுள்ளது. இதில் சிஐடியு மாநிலச் செயலா ளர் பி.என்.தேவா, சம்மேளன நிர்வாகி கள் பொன்.கிருஷ்ணன், அய்யாத்துரை, முனியசாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.விஜயபாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.