மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>நாமக்கல், பிப்.14- அரசு கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு களின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். மாநகராட்சிகளுக்கு தனி இயக்குநரகம் வேண்டும். எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் புதிய ஒப்பந்தமுறை முற்றிலும் ரத்து செய்யப் பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் சனியன்று மாநகராட்சி அலுவ லர்கள் மற்றும் பணியாளர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் தியாக ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முரு கேசன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில், ஏராள மானோர் கலந்து கொண்டனர்.</p>
