தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கையகப்படுத்துதல்களும் இணைப்புகளும்: ஓர் அரசியல் திட்டம்

29 Jun 2026, 11:03 pm
கையகப்படுத்துதல்களும் இணைப்புகளும்: ஓர் அரசியல் திட்டம்

கையகப்படுத்துதல்களும் இணைப்புகளும்: ஓர் அரசியல் திட்டம்

பொருளாதார மற்றும் நிதி விவகாரங்கள் அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படும் இயல்புடை யவைதான். எனினும், தற்போதைய சமகாலச் சூழலில் இவை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுவதில் ஓர் அசாதாரணமான நிலையை நாம் பார்க்க முடிகிறது. இதனை இன்னும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கையில், இது வெறும் தற்செயலான நிகழ்வு மட்டுமல்ல என்பது தெளிவாகப் புலனாகும்.

கார்ப்பரேட் ஆதிக்கமும் இந்திய அரசும்

இந்தியாவில் நிலவும் செல்வ மற்றும் வருமான விநியோகத்தின் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து நீண்ட காலமாகவே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு சிலரின் கைகளில் செல்வங்கள் பெருமளவில் குவிந்திருப்பது என்பது முதலாளித்துவ வளர்ச்சி யின் இயல்பான விதிகளால் உருவான ஒன்ற ல்ல. மாறாக, இது ஒரு சில கார்ப்பரேட்டுகளு க்கும் இந்திய அரசுக்கும் இடையில் நிலவும் நெருக்கமான கள்ளப் பிணைப்பின் வெளிப் கடையான அறிகுறியாகும். ‘இந்துத்துவா ராஷ்ட்ரம்’ குறித்து நாம் விவாதித்துக் கொண்டி ருக்கும் அதே வேளையில், ஒரு சில குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளின் நலன்களை இந்திய அரசு முன்னெடுத்துப் பாதுகாப்பதன் மூலம், அவை ‘நிதிசார் அதிகாரக் குழுக்களாக’ (financial oligarchies) உருவெடுப்பதற்குக் காரணியாகச் செயல்பட்டு வருகிறது என்பதே உண்மையாகும். உண்மையில், கொள்கை முடிவுகளை எடுப்பதில் இந்த அதிகாரக் குழுக்களின் ஆதிக்கம் எந்தளவுக்குத் தீவிரமாக உள்ளது என்றால், நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்க வும் வளர்க்கவும் முயன்ற மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசு என்ற கட்டமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இந்தியா ‘கார்ப்பரேட்டு களின் ஆதிக்க ஆட்சி’ (corporatocracy) என்று வர்ணிக்கப்படும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சி

இந்தச் செயல்முறையின் முக்கிய உந்துசக்தியாகவும், பெரும் பயனாளியாகவும் அதானி குழுமம் சந்தேகத்திற்கு இடமின்றி உருவெடுத்துள்ளது. இந்திய அரசு நீண்ட கால நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்களை மீண்டும் தொடங்கிய 2024ஆம் ஆண்டி லிருந்து, அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் 13.27 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வரு வாயை ஈட்டித்தரும் வகையிலான அரசு ஒப்ப ந்தங்களை அதானி குழுமம் பெற்றுள்ளதாக ஊடகங்களின் ஒரு பகுதி சமீபத்தில் வெளி யிட்ட அறிக்கை வெளிப்படுத்தியது. இந்த மின்சா ரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒன்று தவிர மற்ற அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களி லிருந்தே பெறப்பட்டுள்ளன என்பதில் வியப்பு ஏதுமில்லை. 2024 மார்ச்சுக்கும் 2026 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், இது போன்ற பன்னி ரண்டு நீண்ட கால ஒப்பந்தங்கள் ஏலம் விடப் பட்டன. அவற்றில் எட்டு ஒப்பந்தங்கள் பாஜக ஆளும் மாநிலங்களால் மேற்கொள்ளப் பட்டவை. அந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் அதானி குழுமம் தனியாகவோ அல்லது ஒப்பந்தம் பெற்ற பல நிறுவனங்களில் ஒன்றா கவோ கைப்பற்றி இருக்கிறது. பாஜக ஆளும் இம்மாநிலங்களில், அதானி குழுமத்திற்குச் சாதகமாக அமையும் வகையில் டெண்டர் நிபந்தனைகள் மாற்றியமைக்கப்பட்டதை ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கக்கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ள 13.27 லட்சம் கோடி ரூபாய் வருவாயானது, ஒவ்வொரு மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்திற்கும் அறிவிக்கப்பட்ட கட்டணம் மற்றும் அந்தந்த ஒப்பந்தங்களின் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஒப்பந்தங்கள் இருபது ஆண்டுகளுக்கானவை. இவை நிலக்கரி மூலம் இயங்கும் மின் நிலையங்களைச் சார்ந்த மின் உற்பத்திப் பாதையில் மாநிலங்களை நீண்ட காலத்திற்குப் பிணைத்து வைப்பதோடு, வேக மாக மாறிவரும் எரிசக்திச் சூழலில் தொழில்நுட் பம் மற்றும் எரிபொருள் பயன்பாடு தொடர்பான மாற்று வழிகளையும் மட்டுப்படுத்துகின்றன.

ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம்

சமீப காலங்களில், பொதுத் தானிய இருப்புகளைச் சேமிப்பதற்கான இட ஒதுக்கீட்டு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த சேமிப்புத் திறனில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை அதானி குழுமத்திற்குச் சொந்தமான, அவர்களால் நிர்வகிக்கப்படும் மற்றும் கட்டுப்படுத்தப்படும் கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கலன்கள் கையாளுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் இப்போது மிக முக்கியமாக எரிசக்தி மற்றும் ஊடகம் என ஒவ்வொரு துறையிலும் அதானி குழுமத்தின் அப்பட்டமான ஆதிக்கம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. ‘துடிப்பான குஜராத் உலக ளாவிய உச்சி மாநாடு’ தொடர்பான நிகழ்வு களை ஒருங்கிணைத்ததில் தொடங்கி, அரசியல் களத்தில் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் அசுர வளர்ச்சியுடன் அதானி குழுமத்தின் வளர்ச்சியும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள் ளது என்பதை ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழில் நாம் ஏற்கெனவே விரிவாக விளக்கியுள்ளோம். இந்தப் போக்கு, பன்முகத்தன்மை கொண்ட அரசியல் யதார்த்தத்தை ‘புல்டோசர்’ நடவடிக்கைக்கு இணையான சட்டவிரோதச் செயல்முறையின் மூலம் ஒரு குறுகிய வளை யத்திற்குள் அடைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து தற்போதைய புதிய இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் ஒரு சூறாவளியின் வேகத்தை எட்டியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இதற்கு வழிவகுத்துள்ளன.

அரசியல் களத்தில் கார்ப்பரேட் உத்திகள்

2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, மக்களவையில் 400 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக இலக்கு நிர்ணயித்திருந் தது. எனினும், தனது கூட்டணிக் காரர்களுடன் இணைந்தும் கூட அதனால் 300 இடங்களைக் கூட எட்ட முடியாத நிலையிலும், ஆர்எஸ்எஸ்-பாஜக சற்றும் சோர்ந்துபோகவில்லை. கார்ப்ப ரேட் உலகில் வழக்கமாக நடைபெறும் நிறு வன இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நட வடிக்கைகள், தற்போது அரசியல் களத்திலும் மிகுந்த வீரியத்துடன் நடந்து வருகின்றன. கார்ப்பரேட்டுகளின், குறிப்பாக அதானி குழுமத்தின் வளர்ச்சி, அரசியல் செயல்பாட்டின் மீது பாஜக கொண்டுள்ள இறுக்கமான பிடிப்பு டன் நெருங்கிய தொடர்புடையது. செல்வக் குவிப்பும் அரசியல் மேலாதிக்கமும் ஒன்றை யொன்று மையமாகக் கொண்டவை என்பது, எவருடைய கவனத்திலிருந்தும் தப்ப முடியாது. நாடாளுமன்றத்தில் நடக்கும் இந்த எண்ணி க்கை விளையாட்டு, தங்களின் மேலாதிக்கத்தை நிரந்தரமாக நிலைநாட்டும் இந்தச் செயல்முறை யைத் தொடர வேண்டியதன் அவசியத்தாலும் தூண்டப்படுகிறது. எனவே, பாஜகவின் நலன் களுக்கு ஏற்ப இந்தியத் தேர்தல் ஆணையத்தைச் சீர்குலைப்பது என்பது தற்செயலானது அல்ல, மாறாக அது ஆழமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. சமூக-அரசியல் மற்றும் மத அடிப்படையில் வாக்காளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கையாளப்படும் இந்தக் கருவி, இந்துத்துவா உலகப் பார்வையுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. இந்தியா முழு வதும் ஊடுருவல்காரர்கள் புகுந்துள்ளனர் என்ற கற்பனைக் கதையின் அடிப்படையில் ‘தேசிய மக்கள்தொகை இயக்கம்’ (National Demogra phic Mission) ஒன்றை நிறுவும் புதிய முயற்சி யுடன் இந்தச் செயல்முறையை ஒப்பிட்டு பார்க்கும்போது, வரவிருக்கும் இந்த அச்சுறுத் தல் மேலும் வலுப்பெறுகிறது.

உட்கட்சி குறைபாடுகளும் ஜனநாயக அச்சுறுத்தலும்

அதே சமயத்தில், அரசியல் கட்சிகளின் உட்கட்டமைப்புகளில் குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் போன்ற சில கட்சிகள், பிற கட்சிகளிலிருந்து உறுப்பினர் களைத் தங்கள் பக்கம் இழுக்கும் செயலில் தாங்களே ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அதற்காக ஆர்எஸ்எஸ்-பாஜகவின் அதிகாரத்தைக் குவிக்கும் மற்றும் வரம்பு மீறும் நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இத்தகைய செயல்முறையானது ஜனநாய கக் கோட்பாட்டிற்கே விடுக்கக்கூடிய பெரும் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டுவது அவசிய மாகும். ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டு மானால், பல கட்சிகள் இருப்பதும், குடி மக்களுக்கு அரசியல் ரீதியான தெரிவுக்கான வாய்ப்பை உறுதி செய்வதும் அவசியமாகும். இதனால்தான், தேசிய இயக்கத்தில் ஒரு கட்சியின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்த போதிலும், அரசியல் தளம் அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குவதை உறுதி செய்யும் வகையிலான ஒரு அரசியல் அமைப்பின் உள்கட்டமைப்பை இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கியது. ஆனால், அனைவருக் கும் வாக்குரிமை அளிக்கும் அரசியலமைப்பு உரிமையை முழுமையாகப் புறக்கணித்து விட்டு, யார் வாக்களிக்க வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையமே தீர்மானிக்கும் இந்த புதிய போக்கு ஒருபுறம் இருக்க, மறுபுறம் இத்த கைய மோசமான ‘இணைப்பு மற்றும் கையகப் படுத்தல்’ நடவடிக்கைகள் மூலம் கட்சித் தாவல் விவகாரத்தையே தவிர்த்து விடும் தந்திரம் அர சியல் செயல்பாட்டின் புதிய முகமாக மாறியுள்ளது.

ஒன்றிணைந்த போராட்டத்தின் அவசியம்

எனவே, இச்செயல்பாடுகள் ஒவ்வொ ன்றிற்கும் அங்கொன்றும் இங்கொன்று மாக அவ்வப்போது மட்டும் எதிர்வினையாற்று வதற்குப் பதிலாக, ‘கார்ப்பரேட் இந்துத்துவாவின்’ இந்த மோசமான பிரச்சாரத்தை எதிர்ப்பதற்காக, ஒரு பரந்த அளவிலான எதிர்ப்புதளத்தை உருவாக்க வேண்டும். இத்தளத்தில், இதனால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், நமது மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசு விழுமியங்களை நேசிக்கும் அமைப்புகள், குழுக்கள் மற்றும் தனிநபர் களும் ஒன்றிணைய வேண்டும். அதிகாரத்தைக் குவிக்கும் இப்போக்கின் வெளிப்பாடுகளுக்கு எதிராக, மாணவர்கள் போராடுவதன் மூலமும், தொழிலாளர்கள் கிளர்ச்சிக் கொடி உயர்த்துவதன் மூலமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் ஏற்கெனவே வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டமானது பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் கருத்தியல் எனப் பல தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும். வரலாற்று ரீதியாக, மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடும்போது அவர்களின் கூட்டு வலிமைக்கு எதிராக எந்தவொரு ஆட்சி யாளரும் நிலைத்திருந்ததில்லை என்பதே உண்மையாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜூன் 28, 2026  தமிழில் சுருக்கம்: ச. வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.