தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கார்ப்பரேட்மயமான திரையரங்குகளும் சாமானியர்களின் சினிமா கனவும்! - ஜெ. பொன்மாறன்

7 Oct 2026, 8:37 pm
கார்ப்பரேட்மயமான திரையரங்குகளும் சாமானியர்களின் சினிமா கனவும்!  -  ஜெ. பொன்மாறன்

கார்ப்பரேட்மயமான திரையரங்குகளும் சாமானியர்களின் சினிமா கனவும்! - ஜெ. பொன்மாறன்

ஒரு காலத்தில் சாமானிய மக்களின் மிக முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது திரைப்படம் பார்ப்பது. குடும்பத்துடன் அல்லது நண்பர்களு டன் திரையரங்குக்குச் சென்று படம் பார்த்துவிட்டு,இடைவேளையில் முறுக்கு, போண்டா, கடலை மிட்டாய், ஐஸ்கிரீம், பாப்கார்ன் போன்ற எளியதின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுமகிழ்வது என்பது அன்றாட வாழ்க்கை யின் இயல்பான ஒன்றாக இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில் திரையரங்குகளின் செயல்பாட்டிலும், திரைப்படம் பார்ப்பதற்கான செலவி லும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திரையரங்குகள் நவீனமயமாகி, பல இடங்களில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள நிலையில், திரைப்படம் பார்ப்பது என்பது சாமானிய மக்களுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமையாக மாறிவிட்டதாகத் திரைப்படரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உயரும் டிக்கெட் கட்டணமும் மறைமுகச் செலவுகளும்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த கட்டணத்தில் கிடைத்த சினிமா டிக்கெட், இன்று பலமடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு வகையான இருக்கைகள், திரையரங்குகளின் குளிரூட்டப்பட்ட வசதிகள், திரையிடல்தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் கட்டணங்களில் பெரும் உயர்வுஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர்அல்லது குடும்பத்துடன் திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பதற்கான மொத்தச் செலவு கணிசமாக அதி கரித்துள்ளது. அதுமட்டுமின்றி,போக்குவரத்து, வாகனம் நிறுத்துமிடம் (பார்க்கிங்) என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகச் செலவிட வேண்டியுள்ளது.

தின்பண்டங்களின் “கொள்ளை” விலை

டிக்கெட் கட்டணத்துடன் ஒப்பிடும் போது, திரையரங்குகளில் விற்கப் படும் உணவுப் பொருட்களின் விலையே ரசிகர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. முன்பு மிகக் குறைந்த விலையில் கிடைத்த பாப்கார்ன் மற்றும்ஐஸ்கிரீம்கள், இன்று பல திரையரங்குகளில் பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு காலத்தில் ரூ.10-க்கு வாங்கிய அதே பாப்கார்ன் தற்போது ரூ.100-க்கும்மேல் விற்கப்படுகிறது. ரூ.90 வரை விற்கப்படும் ஒரு ஐஸ்கிரீமை நான்கு பேர் கொண்ட குடும்பம் வாங்கினாலே ரூ.360 செலவாகும். இதனுடன் பீட்சா, பர்கர், குடிநீர் உள்ளிட்ட துரிதஉணவு வகைகளின் விலையும் அதிகமாக இருப்பதால், ஒரு நபர் படம் பார்க்கச் செல்லவே குறைந்தபட்சம் ரூ.500 வரை செலவிட வேண்டியுள்ளது.

நடுத்தரக் குடும்பங்களின் தவிப்பும் ஓடிடி தாக்கமும்

இதனால் “படம் பார்க்க வேண்டும்” என்ற ஆசை இருந்தாலும், செலவு அதிகரிக்கும் என்ற காரணத்தால் பல குடும்பங்கள் திரையரங்குக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றன. இதனுடன் ஓடிடி தளங்களின் வளர்ச்சியும் மக்களின் பொழுதுபோக்குப் பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. வீட்டிலிருந்தபடியே குறைந்த செலவில் திரைப்படங்க ளைப் பார்க்கும்வசதி பெருமளவில் அதிகரித்து வருவதால், திரையரங்குகள் மக்கள் கூட்டத்தை ஈர்ப்பதில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன.

அரசின் தலையீடும் அவசியமும்

நவீன வசதிகள் ஏற்படுவதை யாரும் மறுக்க முடியாது; ஆனால், அந்த நவீனமயமாக்கலின் முழுச் சுமையும் திரைப்பட ரசிகர்களின் மீதுசுமத்தப்படக் கூடாது. திரையரங்கு களில் விற்கப்படும் குடிநீர் மற்றும்உணவுப் பொருட்களின் விலைகளுக்கு அரசு ஒரு நியாயமான கட்டுப்பாட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுவதோடு, குறைந்த விலையில் உள்ளூர் தின்பண்டங்களையும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். சினிமா என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமான பொழுதுபோக்காக மாறாமல், அனைத்துத் தரப்பு மக்களும் அணுகக்கூடியதாகத் தொடர வேண்டும் என்பதே அனை வரின்எதிர்பார்ப்பாகும்.

கலாச்சார உரிமையும் சமூகப் பொறுப்பும்

சினிமா என்பது வெறும் வணிகப் பொருள் மட்டுமல்ல; அது மக்களின் உணர்வுகளோடும் சமூகச் சூழலோடும் பிணைக்கப்பட்ட ஒரு வலிமையான கலை வடிவமாகும். சாமானிய மக்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் பேசும் திரைப்படங்களை அவர்கள் தாமே திரையரங்குகளில் அமர்ந்து அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படுவது ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்ததல்ல. கார்ப்பரேட் மயம் என்ற பெயரில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பொழுதுபோக்கு உரிமைகள் பறிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, கலையை வணிகத்தின் பிடியிலிருந்து மீட்டு,சாமானியர்களுக்கும் உரியதாக மாற்றுவதற்கான ஜனநாயகக் குரல்களை நாம் தொடர்ந்து எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். - ஜெ. பொன்மாறன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.