கடலூரில் 15 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்! நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை
1 Dec 2025, 5:20 pm
<p><strong>கடலூரில் 15 ஆயிரம் ஹெக்டேரில்நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்! நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை</strong></p>
<p>கடலூர்,டிச.1- வடகிழக்குப் பருவமழையால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேர் பரப்பள வில் நெல், மக்காச்சோளம் உள் ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. பரவணாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மணிக்கொல்லை, பூவாலை, அல மேலு, மங்காபுரம், வயலாமூர், சேர்ந்திரகிள்ளை, வல்லம் உள்ளிட்ட 10 கிராமங்களில் விவசாய நிலங்க ளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இது போலவே, பிச்சாவரம், கிள்ளை, கனர கப்பட்டு, பின்னலூர், வசப்புத்தூர், உத்தமசோழமங்கலம், நஞ்சமகத்து வாழ்க்கை ஆகிய கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. குமராட்சி ஒன்றியத்தில் உள்ள வேலக்குடி, பிரளப்பட்டு, சாலியன் தோப்பு, கூத்தங்கோயில், வையூர், அகரநல்லூர், பழைய நல்லூர், கண்டிய மேடு, இளநாங்கூர் கிராமங்களிலும் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. திருநாரையூர், எடையார், உடையூர், பிள்ளையார் தாங்கல் ஆகிய கிராமங்களில், கதிர் வரும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் பலத்த காற்றால் சாய்ந்து சேதமடைந்துள்ளன. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள அயன் குறிஞ்சிப்பாடி, ரெட்டி சாவடி, குருவரம்பபேட்டை, வரதராஜன்பேட்டை, நத்தம், கோதண்டராமபுரம் பகுதிகளில் நெற்பயிர்கள் அழுகிப் போயுள்ளன. கீரப்பாளையம் ஒன்றியத்தில் பூதங்குடி, ஒடாக்காநல்லூர், வெள்ளியங்குடி, பரிபூரண நத்தம் கிராமங்களிலும் பயிர்கள் அழுகிப் போய் உள்ளன. மங்களூர், நல்லூர் ஒன்றியத்தில் உள்ள அருங்காட்சி, சிறுவரம்பூர், காஞ்சனா குளம், பெரிய நெசனுர், தொண்டங்குறிச்சி, பாசலூர், கழுதூர், ஆவட்டி கிராமங்க ளில் மக்காச்சோளப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சேதமடைந்த பயிர்களை வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் விடுபடாமல் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், சேதமடைந்த வீடுகள், தொகுப்பு வீடுகள் மற்றும் உயிரிழந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்த மின் ஒயர்களைச் சீர் செய்ய வேண்டும்; நெற்பயிர்களில் உள்ள சோளப்பூச்சி மற்றும் அந்துப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்; வடிகால் வாய்க்கால்களைச் சீரமைக்க வேண்டும்; சுகாதாரச் சீர்கேடுகளைத் தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரம் செயல்படவும், நடமாடும் மருத்துவக் குழுக்களை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதியாக, கடலூர் மாவட்டத்தை குடிசை இல்லா மாவட்டமாக மாற்றும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் சிபிஎம் மாவட்டச்செயலாளர் கோ.மாதவன் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
