டீசல் விலை உயர்வால் ஒரே மாதத்தில் மல்லி விலை ரூ.1,000 உயர்வு எண்ணெய் வகைகளின் விலையும் கடும் உயர்வு
31 May 2026, 9:59 pm

டீசல் விலை உயர்வால் ஒரே மாதத்தில் மல்லி விலை ரூ.1,000 உயர்வு எண்ணெய் வகைகளின் விலையும் கடும் உயர்வு

விருதுநகர், மே 31- டீசல் விலை உயர்வு மற்றும் போக்கு வரத்து செலவின அதிகரிப்பு காரணமாக, விருதுநகர் சந்தையில் மல்லி மற்றும் சமை யல் எண்ணெய் வகைகளின் விலை கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ள தாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் லயன் ரக மல்லியின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் 40 கிலோ மூட் டைக்கு ரூ.5,100 முதல் ரூ.5,300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது வரத்து அதிகரித்திருந்தா லும், டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட போக்குவரத்து செலவின அதிகரிப்பு கார ணமாக, ஒரு மூட்டைக்கு சுமார் ரூ.1,000 வரை விலை உயர்ந்து, ரூ.6,100 முதல் ரூ. 6,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் லயன் மல்லி ரூ.6,200க்கு விற்ப னையானது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், நாட்டு மல்லியின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வில்லை.

கடந்த மாதம் இருந்த அதே விலை யான 40 கிலோ மூட்டைக்கு ரூ.6,000 முதல் ரூ.6,500 வரை விற்பனை செய்யப்பட்டு வரு கிறது.

இதேபோல், 15 கிலோ கொண்ட நல் லெண்ணெய் டின் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.6,105க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை யில், தற்போது ரூ.330 உயர்ந்து ரூ.6,435க்கு விற்பனையாகிறது.

பாமாயில் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 15 கிலோ டின் ரூ.2,120க்கு விற்பனை செய்யப் பட்ட நிலையில், தற்போது ரூ.310 உயர்ந்து ரூ.2,430க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், தமிழகத்தில் பருப்பு வகை களின் விளைச்சல் ஓரளவு அதிகரித்துள்ள தால், அவற்றின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒரே மாதத்தில் மல்லி மற்றும் சமை யல் எண்ணெய் வகைகளின் விலை கணி சமாக உயர்ந்திருப்பதால், இல்லத்தரசி கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்க ளின் விலை உயர்வு குடும்பச் செலவினங் களை மேலும் அதிகரித்துள்ளதாக நுகர் வோர் கவலை தெரிவித்துள்ளனர்.