இராமேஸ்வரத்தில் பவளப்பாறை காட்சியகம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>இராமேஸ்வரத்தில் பவளப்பாறை காட்சியகம்</strong></p>
<p>இராமேஸ்வரம், பிப். 17- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ் வரத்தை கடல்சார் சுற்றுலா மையமாக மேம்படுத்தவும், கடல்சார் சூழலியல் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக வனத்துறை ஒரு முக்கியத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, இராமேஸ்வரத்தின் அடை யாளமான பாம்பன் பாலத்திற்கு மிக அருகில் உள்ள அரியமான் கிராமத்தில் (2,420 சதுர அடி பரப்பளவில்) சுமார் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன பவளப்பாறை காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள் ளது. இதற்கான டெண்டர் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவின் வனவிலங்குப் பிரிவினால் முன் னெடுக்கப்படும் இந்தத் திட்டம், ஒரு ஆழ்ந்த ‘கடல்சார் பல்லுயிர் விளக்க மையமாக’ செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காட்சியகத்தில் அமைக்கப்படும் மீன் தொட்டியில் மீன்கள், கடல் குதிரைகள் போன்ற உள்ளூர் கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படும். மேலும் ஏஆர்/விஆர் (AR/VR) தொழில்நுட்பம் மூலம், ‘இரவு நேரக்கடல் மூழ்குதல்’ (Night Dive) மற்றும் சுறா போன்ற வேட்டையாடும் உயிரினங்களின் செயல்பாடுகளைப் பார்வையாளர்கள் தத்ரூபமாக பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.</p>
