சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பெரம்பலூரில் ஒருங்கிணைப்புக் கூட்டம்
11 Jan 2026, 2:59 pm
<p><strong>சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பெரம்பலூரில் ஒருங்கிணைப்புக் கூட்டம்</strong></p>
<p>பெரம்பலூர், ஜன.11- பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பவாய் புற்றுநோயை தடுக்கக்கூடிய HPV தடுப்பூசி திட்டம் தொடர்பான, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவிக்கையில், “14 வயதுடைய சிறுமிகளுக்கு ஏற்படக்கூடிய கருப்பை வாய் புற்றுநோயினை தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன. இந்த தடுப்பூசியானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 98 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 14 வயதான 2,712 மாணவிகளுக்கு இரண்டு தவணைகளாக செலுத்தப்படவுள்ளது. எனவே, மாணவிகளின் எதிர்கால நலன்கருதி செலுத்தப்படும் இந்த தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளிடமும், அவர்களின் பெற்றோரிடத்திலும் ஆசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் 3000-க்கு மேல் பணம் செலுத்தினால் மட்டுமே செலுத்தப்படும் இந்த தடுப்பூசியானது, நமது அரசால் இலவசமாக மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்ற விபவரத்தை அனைவருக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, இணை இயக்குநர் மரு.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
